பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கிண்டல் கலந்த வாழ்த்து!!

பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கிண்டல் கலந்த வாழ்த்து!!

பிரதமர் நரேந்திர மோடி 72வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார்.  எதிர்க்கட்சி தலைவர்களும் பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.  திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளில் கிண்டலுடன் வாழ்த்து தெரிவித்துள்ளார். மத்திய அரசின் கொள்கைகளை அடிக்கடி விமர்சிக்கும் மொய்த்ரா, இன்றைய சந்தர்ப்பத்திலும் கூட ட்வீட் செய்ய தயங்கவில்லை. 

நமீபியா சிறுத்தைகள்:

பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, தென்னாப்பிரிக்க நாடான நபிபியாவில் இருந்து எட்டு சிறுத்தைகள் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளன. 1952ல் இந்தியாவில் சிறுத்தைகள் முற்றிலுமாக அழிந்துவிட்டன.

70 ஆண்டுகளுக்குப் பிறகு, சிறுத்தைகள் வேறு நாட்டிலிருந்து அழைத்து வரப்பட்டு இன்று பிரதமர் மோடியினால் பாதுகாப்பான வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டுள்ளன. நமீபியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சிறுத்தைகள் மூலமாக அதிக அளவில் சிறுத்தைகள் எண்ணிகை அதிகரிக்க முடியும் என்ற நம்பிக்கையில் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும் தெரிந்துகொள்க: நமீபியா சிறுத்தைகள் வருகை குறித்து பிரதமர் மோடி பெருமிதம்!!!

வாழ்த்து தெரிவித்த மொய்த்ரா:

பிரதமர் நரேந்திர மோடியின் 72-வது பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து எம்பி மொய்த்ரா இன்று ட்வீட் செய்துள்ளார்.  வாழ்த்துச் செய்தியிலும் பிரதமர் மீதான கோபம் காணப்பட்டதாகவே தெரிகிறது. பிரதமர் மோடியின் பிறந்தநாளில் நமீபியாவில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட எட்டு சிறுத்தைகள் குறித்து மொய்த்ரா கேலி செய்துள்ளார். ”அழிந்து வரும் சிறுத்தைகளுக்காக பாடுபடுவதைப் போல அவரால்  வேகமாக மறைந்து வரும் நமது அரசியலமைப்பைப் பாதுகாத்துக் காப்பாற்ற முடியுமா?” என எம்.பி மொய்த்ரா ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி வாழ்த்து:

 ”பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்” என ஒரே ஒரு வரியை மட்டும் ட்வீட் செய்து பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி. 

காங்கிரஸ் வாழ்த்து:

பிரதமர் ஆரோக்கியமாகவும் நீண்ட ஆயுளுடனும் வாழ வாழ்த்தியுள்ளார் சசி தரூர்.  மேலும்  “நமது சக குடிமக்கள் பலரின் இருளை அகற்றி அவர்களை முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் சமூக நல்லிணக்கப் பாதையில் இட்டுச் செல்ல அவர்களும் உழைக்க முடியும்” என்று ட்வீட்டரில் நம்பிக்கை தெரிவித்துள்ளார் சசி தரூர்.

”பிறந்தநாள் வாழ்த்துகள் பிரதமர் நரேந்திர மோடி” என காங்கிரஸ் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், ”நாட்டின் இளைஞர்களுக்காக நீங்கள் நிறைய செய்திருக்கிறீர்கள். இதனால் தான் இன்று 'தேசிய வேலையில்லா தினமாக' கொண்டாடப்படுகிறது. நாட்டில் உள்ள ஒவ்வொரு வேலையற்றவரும் உங்களுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறார்கள். ” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.

இதையும் படிக்க:  ’அண்ணா மாடல்’ vs ’மோடி மாடல்’