நமீபியா சிறுத்தைகளுக்கு பெயர்சூட்டும் போட்டி!!! பிரதமர் அழைப்பு!!!பரிசு என்ன தெரியுமா??

நமீபியா சிறுத்தைகளுக்கு பெயர்சூட்டும் போட்டி!!! பிரதமர் அழைப்பு!!!பரிசு என்ன தெரியுமா??

மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, சிறுத்தைகளைப் பார்க்கும் வாய்ப்பு எப்போது கிடைக்கும் என்று பலர் கேட்டுள்ளதாக கூறியுள்ளார்.  அதற்கு பதிலளிக்கும் வகையில் சிறுத்தைகளுக்காக பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் இங்குள்ள சூழலில் சிறுத்தைகள் எந்த அளவுக்கு ஒன்றுகின்றன என்பது தெரிந்த பிறகே  பொது மக்கள் சிறுத்தைகளைப் பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறியுள்ளார்.

​பிரதமர் மோடி, ”உங்கள் அனைவருக்கும் சில பணிகளை ஒதுக்குகிறேன், இதற்காக, இணையதளத்தில் ஒரு போட்டி நடத்தப்படும், அதில் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ளுமாறு மக்களை கேட்டுக்கொள்கிறேன். சிறுத்தைகளைப் பற்றி நாங்கள் நடத்தும் பிரச்சாரத்திற்கு என்ன பெயர் வைக்க வேண்டும்” என்று பிரதமர் மக்களிடம் கேட்டுள்ளார். மேலும் ”இந்த பெயர் பாரம்பரிய பெயராக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும். ஏனெனில், நமது சமூகம் மற்றும் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான எதுவும் நம்மை எளிதில் ஈர்க்கிறது.” என்றும் தெரிவித்துள்ளார். 

மேலும் தெரிந்துகொள்க: சுற்றுச்சூழல் நிலைத்தன்மை மீது நம்பிக்கை கொண்டு வந்த ஆஷா!!!யார் அந்த ஆஷா!!!

சிறுத்தைகளுக்கான பெயர்:

சிறுத்தைகளுக்கு பெயர் வைப்பது குறித்தும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பியுள்ளார். மன் கி பாத் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ”இந்த சிறுத்தைகள் ஒவ்வொன்றும் எந்த பெயரில் அழைக்கப்பட வேண்டும் என்று நாம் விவாதிக்கலாமா?  இந்த போட்டியில் நீங்கள் கண்டிப்பாக பங்கேற்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன், வெற்றி பெறுபவர்கள் சிறுத்தைகளை பார்க்கும் முதல் வாய்ப்பு கிடைக்கும் என்பதை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: உலக மகள்கள் தினத்தில் வாழ்த்துகளை பகிர்ந்து மகள்களே பெருமை கொள்ளுங்கள்!!!