ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான்!- ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு...

திண்டுக்கல் நகரில் ஒட்டப்பட்டுள்ள ரஜினி ரசிகர்களின் போஸ்டரால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தான்!- ரசிகர்கள் ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு...

நடிகர் விஜய் நடித்து வெளிவந்துள்ள வாரிசு திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவின் போது படத்தின் தயாரிப்பாளர் உள்ளிட்ட பலரும் அவருக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் சூட்டி அவரை சூப்பர் ஸ்டார் என்று அழைத்து பாராட்டி மகிழ்ந்தனர்.

அதனை தொடர்ந்து அவரது ரசிகர்கள் அவரை சூப்பர் ஸ்டார் என்று அழைத்தே  சுவரொட்டிகளையும் பல்வேறு இடங்களில் வைத்து வருகிறார்கள். 

மேலும் படிக்க | வெற்றி வாகை சூடப்போவது விகரமனா?

இந்த நிலையில், ஏற்கனவே திரையுலகில் ஒரே சூப்பர் ஸ்டார் தான் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மட்டுமே என்று திரை உலகினரும் அவரது ரசிகர்களும் ஆண்டாண்டு காலமாக அழைத்து வருகின்றனர். திடீரென அந்த பட்டத்தை நடிகர் விஜய்க்கு சூட்டியது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | தன் கோவிலுக்கு தானே வந்த நடிகர் சோனு சூத்...

இதன் எதிரொலியா திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், சின்னாளபட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் திண்டுக்கல் மாவட்ட அண்ணாத்த குரூப்ஸ் சார்பாக ரஜினி ரசிகர்கள்  ஒட்டியுள்ள சுவரொட்டிகள் இன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அந்த சுவரொட்டிகளில்,

உயர உயர பறந்தாலும் பறந்தாலும், ஊர் குருவி பருந்தாகாது!

அன்றும் இன்றும் என்றுமே ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த் மட்டுமே

என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளது. திண்டுக்கல் நகரில் ஒட்ட்ப்பட்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சுவரொட்டிகளால் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மேலும் படிக்க | மாற்றத்துக்கான விதையை ஆழமாக விதைக்கும் முயற்சி தான் ‘அயலி’...