தன் கோவிலுக்கு தானே வந்த நடிகர் சோனு சூத்...

தன் கோவிலுக்கு தானே வந்த நடிகர் சோனு சூத்...

தெலுங்கானா | சித்தி பேட்டை மாவட்டம் செல்மிதாண்டா ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் கிராமத்தில் நடிகர் சோனு சூதிற்கு கோயில் ஒன்றை கட்டி, அதில் அவருடைய சிலையை நிறுவியுள்ளனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் கொரோனா காலத்தில் அவர் பொதுமக்களுக்கு செய்த உதவிகளுக்காக அங்கு அவருக்கு கோவில் கட்டப்பட்டது. இந்த நிலையில் தன்னுடைய கோவிலை பார்க்க வேண்டும் என்ற ஆவலில் நேற்று இரவு சித்தி பேட்டை வந்தார் சோனு சூத்.

இன்று காலை அவர் செல்மிதாண்டா கிராமத்திற்கு வந்தார். அவரை அன்புடன் வரவேற்ற கிராம மக்கள் அவரை சோனு சூத் கோவிலுக்கு அழைத்து சென்றனர். தன் மீது இருக்கும் அன்பு காரணமாக கிராம மக்கள் தனக்கு கட்டிய கோவிலை பார்த்த அவர் நெகிழ்ச்சி அடைந்தார்.

மேலும் படிக்க | தாழ்த்தப்பட்டோருக்கான பள்ளியை கட்டிய நடிகர் சோனு...பிறந்தநாளில் செய்த செயல்...!