தாழ்த்தப்பட்டோருக்கான பள்ளியை கட்டிய நடிகர் சோனு...பிறந்தநாளில் செய்த செயல்...!

பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது பிறந்தநாளை முன்னிட்டு தாழ்த்தப்பட்டோருக்கான பள்ளியை கட்டி கொடுத்துள்ளார்.

தாழ்த்தப்பட்டோருக்கான பள்ளியை கட்டிய நடிகர் சோனு...பிறந்தநாளில் செய்த செயல்...!

பாலிவுட் நடிகர் சோனு சூட் தனது பிறந்தநாளை முன்னிட்டு தாழ்த்தப்பட்டோருக்கான பள்ளியை கட்டி கொடுத்துள்ளார். 

சோனு சூட் : 

பாலிவுட்டில் பல படங்களில் நடித்த சோனு, தமிழிலும் பல படங்களில் வில்லன் கதாபாத்திரத்திலும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளார். தமிழில் ராஜா, சந்திரமுகி, அருந்ததி போன்ற பல படங்களில் வில்லனாக நடித்து மக்கள் மனதில் நின்றவர், நிஜ வாழ்விலும் அப்படி தான் இருப்பார் என்ற எண்ணத்தையும் மக்கள் மனதில் விதைத்தது. ஆனால் நிஜ வாழ்வில் பலருக்கும் ஹீரோவாக இருக்கிறார் சோனு.

சோனுவின் உதவிகள் :    

நடிகரும், சமூக ஆர்வலருமான சோனு சூட் பல கடுமையான நேரங்களில் மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறார். அதிலும் குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் இவரது சேவை பெரிதும் பேசப்பட்டது. தொடர்ந்து பல மக்களும் அவரை நம்பி தங்களுக்கான உதவிகளை கேட்டு வருகின்றனர். அதோடு பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, வழங்கும் புதிய திட்டத்தையும் தொடங்கி நடத்தி வருகிறார். 

தாழ்த்தப்பட்டோருக்கான பள்ளி :

இந்நிலையில் தற்போது சோனு, இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும், தனது பிறந்தநாளில் ஏழை, எளியோருக்கு உதவிகளை செய்து வருவது வழக்கம். அந்த வகையில் தற்போது, பள்ளிகளை தரம் உயர்த்தி, ஷீரடிக்கு அருகில் உள்ள காங்குரியில் தாழ்த்தப்பட்டோருக்கான புதிய பள்ளியை கட்டி, அதன் மூலம் பின்தங்கிய இளைஞர்களுக்கு கல்வி கற்பிக்கும் பணியை மேற்கொண்டுள்ளார். இம்முயற்சி இதுவரை யாராலும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திட்டம் குறித்த சோனுவின் கருத்து : 

இதுகுறித்து சோனு, எதிர்பாராத சூழ்நிலைகளால் கல்வியை கைவிட வேண்டிய பழங்குடி மற்றும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதே முக்கிய திட்டம் என கூறியுள்ளார். மேலும் கல்வியை வழங்குவதோடு மட்டுமல்லாமல், கிராம மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதும், பழங்குடியின மக்களின் கல்வியறிவு விகிதத்தை மேம்படுத்துவதும் இத்திட்டத்தின் மற்றொரு நோக்கமாகும். இந்த திட்டம் 2020 முதல் தீவிரமாக செயல்பட்டு வரும் சூட் அறக்கட்டளையின் ஒரு பகுதியாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.