ஜனவரி 26 வெளிவர இருக்கிறாள் ‘அயலி’...

முத்துக்குமார் இயக்கத்தில் எஸ் குஷ்மாவதி தயாரிப்பில் அபி நக்ஷத்ரா நடிக்கும் அயலி என்ற இணைய தொடர் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
ஜனவரி 26 வெளிவர இருக்கிறாள் ‘அயலி’...
Published on
Updated on
1 min read

பழைய சம்பரதாயங்கள் பற்றிய கதைகள் பல நமது கோலிவுட்டில் வந்திருந்தாலும், ஒன்று அவை யாவும் வெறும் மூடநம்பிக்கைகள் தான் என்றும் அப்படியில்லையென்றால் அவை அனைத்தும் உண்மை தான் அவற்றை அப்படியே நம்ப வேண்டும் என்றெல்லாம் தான் கதைகளை உருவாக்கியுள்ளனர்.

ஆனால், அதன் உண்மைத் தன்மை கொண்டதும், அதனால் வரும் பின்விளைவுகளையும் பல படங்கள் வெளிப்படுத்த தயங்குவதான் உண்மையாக இருக்கிறது. இந்நிலையில், பிரபல வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, 2023ம் ஆண்டின் தனது முதல் தமிழ் இணைய தொடரான ‘அயலி’யை வெளியிடுவது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. வருகிற ஜனவரி 26ம் தேதியன்று வெளியாக இருக்கும் இந்த இணையத் தொடருக்கான எதிர்பார்ப்பு மிகவும அதிகமாக இருக்கிறது என்றே சொல்லலாம்.

வீரப்பன்னை என்ற கிராமத்தில், மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் வாழ்ந்து வரும் 8ம் வகுபு படிக்கும் சிறுமிதான் ‘தமிழ் செல்வி’. ஆனால், அந்த கிராம வழக்கப்படி, அக்கிராமத்து பெண்கள் பருவமடைந்தவுடன் திருமணம் செய்து வைக்கவேண்டும் என்பது மரபு. மேலும், அங்குள்ள மக்களின் ‘அயலி’ என்ற கிராம தெய்வம், அந்த மரபினை கடைபிடிக்காவிட்டால் கிராமத்தையே சபிப்பாள் என்ற தொன்றுதொட்ட நம்பிக்கை இருக்கிறது.

இந்நிலையில், பழங்கால, கற்கால நம்பிக்கைகளையும், பழக்க வழக்கங்களையும் தகர்த்து எரிது அந்த சிறுமி எப்படி மருத்துவராகிறாள்? அவரால் தனது இலக்கை அடைய முடிகிறதா, இல்லையா? இவரால், அக்கிராமத்தில் வசிக்கும் மற்ற சிறுமிகளுக்கு புது வாழ்க்கையும், அவர்களது வாழ்க்கைக்கு ஒரு புதிய வெளிச்சமும் இருக்கிறதா என்பதனை விவரிக்கிறது இந்த இணையத்தொடர்.

8 எபிசோடுகளாக வெளியாக இருக்கும் இந்த தொடரை, எஸ். குஷ்மாவதி எஸ்ட்ரெல்லா ஸ்டோரிஸ் தயாரிப்பில், முத்துக்குமார் இயக்கத்தில் அபி நட்சத்திரா, அனுமோல், அருவி மதன், லிங்கா மற்றும் சிங்கம்புலி ஆகியோர் நடிப்பில் ZEE5 தளத்தில் வரும் ஜனவரி 26ம் தேதியன்று வெளியாக இருக்கிறது. இவர்களுடன் கூடுதலாக, லட்சுமி பிரியா, ஸ்ம்ருதி வெங்கட் மற்றும் பகவதி பெருமாள் ஆகியோரும் விருந்தினர் பாத்திரத்தில் தோன்றியுள்ளனர்.

பிரபல ஸ்ட்ரீமிங் தளமான ZEE5யில் வெளியான விலங்கு, ஃபிங்கர்டிப், எஸ்2 மற்றும் பேப்பர் ராக்கெட் ஆகிய தமிழ் தொடர்களின் வெற்றியைத் தொடர்ந்து, இந்த ஆண்டிற்கான பிரத்யேக வெப் தொடர்களுக்கான ஆர்வம் ரசிகர்களிடையே உருவாகி இருப்பது யாராலும் மறுக்க முடியாதது. இந்நிலையில், இந்த புத்தாண்டின் தனது முதல் தமிழ் பிரத்யேக தொடரான ‘அயலி’யை வருகிற குடியரசு தினத்தில் வெளியிட இருப்பது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com