நடிகர் வடிவேலு தாயார் மரணம்...ஆறுதல் கூறிய முதலமைச்சர்!

நடிகர் வடிவேலு தாயார் மரணம்...ஆறுதல் கூறிய முதலமைச்சர்!

நடிகர் வடிவேல் தாயார் உடல்நலக்குறைவு காரணமாக காலமானதை தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்துள்ளார்.

நடிகர் வடிவேலு :

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராகவும், கதாநாயகனாகவும் வடிவேலு வலம் வருகிறார். இவருடைய காமெடி என்றால் சின்ன குழந்தை முதல் வயதானவர்கள் வரை ரசித்து பார்க்கிறார்கள். அந்த அளவிற்கு தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார்.

இதையும் படிக்க : மீண்டும் மீண்டும் சர்ச்சையை கிளப்பும் தமிழ்நாடு ஆளுநர்...எம்.பி.வெங்கடேசன் குற்றச்சாட்டு!

வடிவேலு தாயார் மறைவு :

இந்நிலையில் மதுரை வீரகனூரில் வசித்து வந்த நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி நேற்று இரவு உடல்நல குறைவால் காலமானார். இது குறித்து பேசிய நடிகர் வடிவேலு, எனது தாயார் சரோஜினி கடந்த சில நாட்களாகவே உடல் நலக்குறைவு காரணமாக மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், நேற்று இரவு திடீரென ஏற்பட்ட உடல்நிலை குறைவு காரணமாக தாயார் காலமானதாகவும் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஆறுதல் :

தொடர்ந்து பேசிய அவர், தனது தாய் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் உள்ளிட்ட அரசியல் கட்சித்  தலைவர்களும், திரைப் பிரபலங்களும் தொலைபேசி வாயிலாக ஆறுதல் தெரிவித்ததாக கூறினார். மேலும், யாருக்கும் சிரமம் தராமல் பொங்கல் பண்டிகை முடிந்தவுடன் எனது தாய் காலமாகி உள்ளதாக வடிவேல் நெகிழ்ச்சி தெரிவித்தார்.