#EXCLUSIVE | காதல் திருமணம் தான் செய்வேன்.. உறுதி படுத்திய விஷால்...

பிரதமர் மோடி குறித்து சமீபத்தில் ட்வீட் செய்ததை அடுத்து முதன்முறையாக அது குறித்த விளக்கத்தை தற்போது பத்திரிக்கையாளர்களுக்குக் கொடுத்துள்ளார்.
#EXCLUSIVE | காதல் திருமணம் தான் செய்வேன்.. உறுதி படுத்திய விஷால்...
Published on
Updated on
2 min read

சமீபத்தில் காசி யாத்திரை சென்றிருந்த நடிகர் சங்கத் தலைவர் மற்றும் தயாரிப்பாளர் விஷால், பல அமைதி காத்தே வந்தார். ஆனால், அவர், பிரதமர் மோடியை டாக் செய்து வெளியிட்ட ட்வீட் ஒன்று அவரது அரசியல் வாழ்க்கை குறித்து பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதனை விளக்கும் வகையில் விஷால் தனது தரப்பை கூறியுள்ளார்.

சென்னை மாதவரம் அடுத்த மாத்தூரில் விஷால் தலைமையில் தனது ரசிகர்களுக்கு இலவச திருமணம் செய்து வைத்து வரிசை கொடுத்தார். அதில், பத்திரிக்கையாளர்களிடம் பேசிய போது தான் இது குறித்தும் பேசியிருந்தார்.

அப்போது, “மோடி குறித்து ட்வீட் செய்திருந்தேன். ஏன் என்றால், என்ன தோன்றுகிறதோ அதை சொல்ல வேண்டும். இப்போது நாம் தாஜ்மகாலை பார்த்தால் ஷாஜகானை வியந்து பார்க்கிறோம். அதே போல தான் காசி பயணத்தில், மோடி அவர்கள் புதுப்பித்தது பற்றிக் கூற விரும்பினேன். எனக்கு நல்ல அனுபவமாக இருந்தது, மகிழ்ச்சியாக இருந்தது என்பதை நான் தெரிவிக்க விரும்பினேன். அதனை தெரிவித்தது எனக்கு மேலும் மகிழ்ச்சியைத் தருகிறது.

இதில் எந்த அரசியலும் இல்லை, ஒரு சாதாரண குடிமகனாக அந்த இடத்திற்கு சென்ற எனது அனுபவத்தை நான் பகிர்ந்து கொள்ள ஆசை பட்டேன். நான் பிரதமரிடம் பகிர்ந்த செய்திக்கு அவர் பதிலளித்தது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது.” எனக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கெல்லாம் பொறுமையாக பதிலளித்து சென்றார்.

கேள்வி : திருமணமே செய்யாமல் திரைத்துறை அப்துல் கலாமாக விருப்பமா?

அப்படியெல்லாம் இல்லை. கண்டிப்பாக இதே போல, எனக்கு திருமணமான பிறகு அடுத்து என்ன என்று தான் கேட்க போகிறீர்கள். கண்டிப்பாக திருமணம் நடக்கும்.

கேள்வி : தேதி விரைவில் அறிவிப்பீர்களா?

கண்டிப்பாக உங்களுக்கே தெரிய வரும். உங்களுக்கு தெரியாமல் கண்டிப்பாக எனது திருமணம் நடக்காது.

கேள்வி : கட்டிடத்தின் நிலை எந்த அளவில் இருக்கிறது?

இனி பெரிய பிரச்சனைகள் இல்லை. அனைத்தையும் தாண்டி வந்து விட்டோம். இதற்கு மேல் யாராலும் தடைகளை விதிக்க முடியாது. எனக்கு கடவுள் இருக்கிறார். அவர் நான் படும் அவதிகளைப் பார்த்துவிட்டார். ரொம்பவும் பொறுமையாக பார்த்து விட்டார். ஆனால், இந்த நல்ல விஷயம் இனியும் தடையாகக் கூடாது என ஒரு நல்ல தீர்ப்பு நீதிமன்றம் மூலமாக வந்துள்ளது. அதனால் கட்டிட வேலைகளை துவங்கிவிட்டோம்.

கேள்வி : கட்டிடத்திற்கு பிறகு திருமணம் தானா? காதல் திருமணம் தானா?

ஆம் கண்டிப்பாக காதல் திருமணம் தான்.

இது தற்போது இணையத்தில் படு வைரலாக பகிரப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com