ஷாருக்கானுக்கும் சுட்டக்கதை தானா? கமெண்ட் அடிக்கும் இணையவாசிகள்!

ஷாருக்கானுக்கும் சுட்டக்கதை தானா? கமெண்ட் அடிக்கும் இணையவாசிகள்!

வழக்கம்போல இதுவும் சுட்டக்கதை தானா...கிண்டல் அடிக்கும் இணையவாசிகள்!

வெற்றி படங்களை குவித்த அட்லீ:

தமிழ் சினிமாவில் “ராஜா ரணி” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாவனர் அட்லீ. ”ராஜா ரணி” 100 நாட்களையும் தாண்டி திரையரங்குகளில் ஓடியதால் மக்களிடையே அட்லீ நல்ல வரவேற்பை பெற்றார். அதைத்தொடர்ந்து, நிறைய ஹிட் படங்களை கொடுத்து வந்தார். குறிப்பாக, தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய்யுடன் கூட்டணி வைத்து தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து மூன்று வெற்றி படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக வலம் வருகிறார்.

ஜவான் திரைப்படம்:

அந்த வகையில், தற்போது இந்தியில் நடிகர் ஷாருக்கானுடன் கூட்டணி வைத்த அட்லீ, “ஜவான்” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தபடத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிக்கிறார். அத்துடன் முக்கிய கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனேவும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஜவானை தொடர்ந்து, விஜய்யின் 68வது படத்தை அட்லீ இயக்கவுள்ளார்.

இதையும் படிக்க: நாளைய ஆர்.எஸ்.எஸ். பேரணி திடீர் ஒத்திவைப்பு...ஏன் தெரியுமா? விளக்கம் இதோ!

பேரரசு படத்தின் கதை:

இந்நிலையில், இயக்குனர் அட்லீ இயக்கும் “ஜவான்” படத்தின் கதை நடிகர் விஜயகாந்த் நடிப்பில் வெளியான “பேரரசு” திரைப்படத்தின் கதை எனக்கூறி அப்படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த புகார் தொடர்பாக நவம்பர் 9ஆம் தேதிக்கு மேல் விசாரணை நடத்தவுள்ளதாக தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கமெண்ட் அடிக்கும் இணையவாசிகள்:

முன்னதாகவே, இயக்குனர் அட்லீ இயக்கிய “ராஜா ராணி” திரைப்படம் “மெளனராகம்” படத்தின் கதை என்றும், “மெர்சல்” திரைப்படம் “மூன்று முகம்” படத்தின் கதை என்றும் இணையங்களில் விமர்சனங்கள் எழுந்தது. அந்தவகையில், தற்போது அட்லீ இயக்கும் “ஜவான்” திரைப்படம் “ பேரரசு” படத்தின் கதை என்று புகார் எழுந்துள்ளது தமிழ் சினிமாவில் சிறிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இணையவாசிகள் சிலர் அப்போ இதுவும் சுட்ட கதை தானா? என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.