" கதாநாயகன் போல் முகபாவனை இல்லாதவன் நான்... ஆனால்...." நடிகர் யோகி பாபு

" கதாநாயகன் போல் முகபாவனை இல்லாதவன் நான்... ஆனால்...." நடிகர் யோகி பாபு
Published on
Updated on
1 min read

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் காமெடி நடிகர்களான யோகி பாபு, சின்னி ஜெயந்த் உள்ளிட்ட 4 காமெடி நடிகர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த யோகிபாபு, வடிவேலு ஒரு சிறந்த நடிகர், தான் அவருடைய தீவிர ரசிகர், அவருடன் சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன், கட்டாயமாக அவருடன் சேர்ந்து நடிப்பேன் என கூறியுள்ளார். 

நடிகர் சாருகானுடன், இரண்டாவது படம் நடிக்கிறேன் அவர் நல்ல நடிகர் அதற்கு இயக்குனர் அட்லிக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றும் தான் கதை, வசனம் எழுதி ஒரு படம் இயக்க உள்ளேன். அதற்கு இன்னும் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை, தயாரிப்பாளர் கிடைத்ததும் இயக்குவேன் என்றும் கூறியுள்ளார். மேலும் பேசிய அவர், நடிகர் விவேக், அப்துல் கலாம் உட்பட பலரிடம் பயணம் செய்துள்ளார். நடிகர் விவேக் நல்ல கருத்துள்ள மனிதர்; அப்துல் கலாம் போன்றவருடன் பயணம் செய்தவர்;  இயக்குனர் சொல்வதை கேட்டு, தான் நடித்து வருகிறேன், ஒப்புக்கொள்கிறேன். கதாநாயகர்களை போல் முகபாவனை இல்லாதவன், ஆனால் மண்டேலா போன்ற படங்கள் கதாநாயகர்களை வைத்து இயக்கக்கூடிய படம் அல்ல; அதனால் தான் இது மாதிரியான படங்களில் கதாநாயகனாக தொடர்ந்து நடித்து வருகிறேன் என பேசியுள்ளார். காமெடியனாகவும், கதாநாயகனாகவும் பார்ப்பது ஒரே முகம் தான் அது மக்களுக்கு நன்றாக தெரியும் எனவும் யோகி பாபு தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com