ஒரு தல காதல் தந்த வாத்தி... “பொயட்டு” தனுஷின் புதிய பாடல்...

“வா வாத்தி” என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
ஒரு தல காதல் தந்த வாத்தி... “பொயட்டு” தனுஷின் புதிய பாடல்...
Published on
Updated on
1 min read

மலையாள மொழியில் தனது திரை பிரதக்ஷையை தெளிவுப்படுத்திய நடிகை சம்யுக்தா மேனனின் முதல் தமிழ், தெலுங்கு இரட்டை மொழி படம் தான் “வாத்தி”. தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் சம்யுக்தா.

இவரது ஒரு தலை காதலை மிக அழகாக விவரிக்கிறது இந்த “வா வாத்தி” பாடல். தனுஷை அணு அணுவாக ரசிக்கும் சக ஆசீர்யரின் ஒரு தலை காதலாக உருவாகியுள்ள இந்த பாடலில், தனுஷ், ஒரு மாணவன் போலவே காட்சியளிக்கிறார்.

அதனால், அவர் உண்மையில், கதையின் தலைப்பில் வருவது போல வாத்தியாரா? அல்லது எதிர்காலத்தில் வாத்தியாராகும் மாணவனா? என்ற கேள்வி இந்த பாடல் மூலம் உருவாகியுள்ளது.

அப்படியென்றால், ஒரு மாணவனுக்கு, ஆசிரியருக்கும் இடையான் அகாதலை விவரிக்கிறதா இந்த பாடல் என்ற கேள்வியும் தற்போது கிளம்பியுள்ளது.

தனுஷ் எப்போதும் வித்தியாசமான பல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிப்பதில் வல்லவர். அவர் தொடங்கி வைத்த பருவக் காதல் கதையான “3” பெருமளவு ஹிட் அடித்ததைத் தொடர்ந்து தற்போது அவர் மீண்டும் ஒரு பள்ளியில் உருவாகும் காதல் கதையை காட்ட இருக்கிறாரா என்ற கேள்வி அவரது ரசிகர்களிடையே பொங்கியுள்ளது.

வெளியாவதற்கு முன்பு இத்தனை எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள இந்த படத்தின் வெளியீட்டு தேதிக்காக வெகு ஆர்வமாக காத்து வருகின்றனர் ரசிகர்கள் என்று சொலவதில் எந்த மிகுதியும் இல்லை.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com