வெளியானது விஜய் சேதுபதியின் 46வது படம் ஃபர்ஸ்ட் லுக்... "DSP"...

நடிகர் விஜய்சேதுபதியின் 46வது படம் குறித்த தகவல் இன்று மாலை வெளியாகுமென தகவல் வெளியான நிலையில் தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

வெளியானது விஜய் சேதுபதியின் 46வது படம் ஃபர்ஸ்ட் லுக்...  "DSP"...

விஜய் சேதுபதியின் 'கடைசி விவசாயி' மற்றும் 'மாமனிதன்' ஆகிய படங்கள் விமர்சன ரீதியாகவும், 'காத்து வாக்குல ரெண்டு காதல்' மற்றும் 'விக்ரம்' பிளாக்பஸ்டர் ஹிட் படங்களாகவும் மாறி, வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந்நிலையில், தற்போது அவரது அடுத்த படத்தின் தலைப்பும், அனத படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

மேலும் படிக்க | இன்ஸ்டாவில் டிரெண்டாகி வரும் ”ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்”...

பொன்ராம் இயக்கத்தில் வெளியாக இருக்கும் இந்த  'விஜேஎஸ் 46' படத்தின் வெளியீட்டு தேதியை டிசம்பர் 2ஆம் தேதியாக சன் பிக்சர்ஸ் நிர்ணயித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படப்பிடிப்பு மார்ச் 2021 இல் தொடங்கி இந்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடைந்தது. 

இந்த படத்தின் டைட்டிள், “DSP” என வைக்கப்பட்டுள்ளது. மிஸ் இந்தியா 2018  அனுக்ரீத்தி வாஸ் இந்த படத்தில் கதாநாயகையாக நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், புகழ் மற்றும் ஷிவானி நாராயணன் மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டி. இமான் இசையமைக்க, தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார், விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

மேலும் படிக்க | விரைவில் உருவாக உள்ளது 'தி வாக்சின் வார்' ..... 'தி காஷ்மீர் ஃபைல்ஸ் ' இயக்குனரின் அடுத்த படைப்பு...!

இந்த படத்தில் விஜய் சேதுபதி கிராமிய போலீஸ் வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்ட நிலையில், அவரது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் மிடுக்கு மிக அழகாக தெரிகிறது. இந்த போஸ்டரால், அவரது ரசிகர்கள் உற்சாக கடலில் துள்ளி குதித்து வருகின்றனர்.

--- பூஜா ராமகிருஷ்ணன்