இன்ஸ்டாவில் டிரெண்டாகி வரும் ”ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்”...

இன்ஸ்டாவில் டிரெண்டாகி வரும் ”ஐயோ சாமி நீ எனக்கு வேணாம்”...

இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின் வரிகளில் வெளியாகியுள்ள ஐயோ சாமி நீ எனக்கு வேணாம் என்ற ஆல்பம் பாடல் இணையத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

யார் இவர்? நாம் நினைத்து கூட பார்த்திராத பல தமிழ் பாடல் வரிகளுக்கு சொந்தகாரரான இந்த பொத்துவில் அஸ்மின் பற்றி விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு....

மேலும் படிக்க | விரைவில் உருவாக உள்ளது 'தி வாக்சின் வார்' ..... 'தி காஷ்மீர் ஃபைல்ஸ் ' இயக்குனரின் அடுத்த படைப்பு...!

சில மாதங்களுக்கு முன்பு சிங்கள மொழியில் வெளியான மனிகே மகே ஹித்தே என்ற பாடல் வொர்ல்டு ஹிட் அடித்தது. இப்போது அதே இசைக்கு தமிழில் வரிகளை எழுதி உள்ளார் இலங்கையின் பிரபல பாடலாசிரியர் அஸ்மின்தான்.

யார் இந்த அஸ்மின்தான் என்றால், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடித்த நான் படத்தில் "தப்பெல்லாம் தப்பே இல்லை" என்ற பாடலின் வரிகளுக்கு சொந்தக்காரர் தான் இந்த அஸ்மின்.

மேலும் படிக்க | எச்சில் துப்பிய நடிகை ...! ஒவ்வொன்றாக அம்பலமாகும் அவலங்கள்...!

இந்த பாடலை பெண்களுக்கான சூப் பாடலாக எழுதி உள்ளார் அஸ்மின்தான். சொல்லமுடியாத காதல் தோல்விகளின் ரணங்களை இன்ஸடாவில் இந்த பாடல் வழியாக வெளிப்படுத்தி வருகின்றனர் பெண்கள்.. 

புதிதாக வளர்ந்து வரும் எங்களைப் போன்ற கலைஞர்களை ஊக்குவித்து வரும் ஊடகங்களுக்கும், மக்களுக்கும் நெகிழ்ச்சிப்பட நன்றி தெரிவித்திருக்கிறார் அஸ்மின். 

மேலும் படிக்க | விஜய்சேதுபதியின் 46வது படம் என்ன தெரியுமா?

--- பூஜா ராமகிருஷ்ணன்