இந்தியாவிற்கு இரண்டு ஆஸ்கார்கள்... மேடையை அலங்கரித்த இந்திய படங்கள்...

இந்தியாவில் இருந்து ஒரு ஆவண படத்திற்கும், ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கும் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கு இரண்டு ஆஸ்கார்கள்... மேடையை அலங்கரித்த இந்திய படங்கள்...

லாஸ் ஏஞ்சல்ஸில் கோலாகலமாக நடந்து கொண்டிருக்கும் ஆஸ்கர் விருது வழங்கும் விழாவை உலகம் முழுவதும் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கின்றனர். 2020ம் ஆண்டு கொரோனா தடுப்புகளை தாண்டி ஒரு சில படங்கள் மட்டுமே ஓடிடி தளங்களில் வெளியாகின.

ஆனால், கடந்த 2022ம் ஆண்டுதான் முதன் முறையாக முழு பார்வையாளர்களுடன் தியேட்டர்களுக்கு படங்கள் வந்தன. இந்நிலையில், ஆஸ்கர் விருதுகள் வழங்குவது மிகவும் கடினமாகி வைட்டது.

ஆனால், இந்த ஆண்டு, பல இந்திய படங்கள் உலகளவில் வரவேற்புப் பெற்றது. கே.ஜி.எஃப், காந்தாரா, ஆர்.ஆர்.ஆர், விக்ரம் என பல தென்னிந்திய படங்கள் அதில் பெரும் பங்கு வகித்த நிலையில், இந்த ஆண்டு பல இந்திய படங்கள் ஆஸ்கார் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது.

மேலும் படிக்க | ‘நாட்டு நாட்டு’ ஸ்டைலில் வரவேற்கப்பட்ட ஆஸ்கார் தொகுப்பாளர்...

அதி, தமிழ் ஆவண குறும்படமான The Elephant Whisperers, ஆஸ்கர் விருது வென்று தமிழர்களுக்கு பெருமை சேர்த்தது. முதன்முறையாக இரண்டு பெண்கள் சேர்ந்து தயாரிப்பாளர்களாக ஆஸ்கர் விருது பெறுவது இது தான் முதன் முறை என மேடையில் பேசிய ‘The Elephant Whisperers’ தயாரிப்பாளர்களுக்கு அனைவரும் பலத்த கரகோஷங்கள் கொடுத்தனர். அவர்கள் மேடையில், “இரு பெண்கள் சேர்ந்து இந்தியத் தயாரிப்பில் முதன்முறையாக ஆஸ்கர் விருதை வென்றுள்ளோம்...” எனக் கூறினர்.

ஆஸ்கர் விருது விழாவில் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலை இந்திய நடிகை தீபிகா படுகோன் அறிமுகப்படுத்தினார். இந்தியாவின் சிறந்த பாடல் என அறிமுகப்படுத்தியது, பலத்த கரகோஷங்களைப் பெற்றது. மேலும், அந்த பாடலை கேட்டு ரசித்த நடிகர் நடிகைகள், எழுந்து கரகோஷங்கள் எழுப்பியது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஆஸ்காரில் ஸ்டாண்டிங் ஓவேஷன் பெற்ற ‘நாட்டு நாட்டு’...

திரைப்பட இயக்குநர்கள் கார்த்தி கொன்சல்வேஸ், உனித் முங்கா விருதை பெற்று மகிழ்ச்சி அடைந்தனர். மேலும், 'Everything All At Once' படத்தில் நடித்த Ke Hu Quan-க்கு சிறந்த துணை நடிகருக்கான விருது, அதே படத்தில் நடித்த ஜேமி லீ சிறந்த துணை நடிகைக்கான விருதை வென்றார். பினோக்கியோ -விற்கு சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருது,

சிறந்த ஆவணப்படத்திற்கான ஆஸ்கர் விருதை 'நவால்னி' ஆவணப்படம் வென்றது. சிறந்த ஒப்பனை, சிகை அலங்காரத்துக்கான விருதை 'The Whale' படம் பெற்றது. ஜேம்ஸ் கேமரோன் இயக்கத்தில் வெளியான அவதார்-2 படத்துக்கு சிறந்த Visual Effects-க்கான ஆஸ்கர் விருது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | ’ஜெயிலர்’: முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தின் மேக்கிங் வீடியோ...இணையத்தில் வைரல்!