‘நாட்டு நாட்டு’ ஸ்டைலில் வரவேற்கப்பட்ட ஆஸ்கார் தொகுப்பாளர்...

‘நாட்டு நாட்டு’ ஸ்டைலில் வரவேற்கப்பட்ட ஆஸ்கார் தொகுப்பாளர்...

இந்த ஆண்டின் ஆஸ்கார் விருது வழங்கும் விழா, பிரபல ஜிம்மி கிம்மெல் என்ற நகைச்சுவை தொகுப்பாளரால் தொகுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு, தொகுப்பாளர் க்ரிஸா ராக்-கை நடிகர் வில்ஸ்மித் அரைந்ததே பெரும் சர்ச்சையான நிலையில், இந்த ஆண்டு ஜிம்மி கிம்மெல்-இன் தொகுப்புக்காக உலக சினிமா ரசிகர்கள் வெகு ஆர்வமாக காத்து வருகின்றனர்.

மேலும் படிக்க | ஆஸ்காரில் ஸ்டாண்டிங் ஓவேஷன் பெற்ற ‘நாட்டு நாட்டு’...

இந்நிலையில், தனது எண்ட்ரியை ஆஸ்காருக்கு தேர்வாகியுள்ள இந்திய படங்களில் ஒன்றான ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலில் வருவது போல, அதே ஆடைகள் மற்றும் அதே ஆடலுடன் மிகவும் நகைச்சுவையாகவும் வியக்கத்தக்க அளவிலும் வருகை கொடுத்தார் ஜிம்மி கிம்மெல். இந்த வருகை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புப் பெற்று வருகிறது.

மேலும் படிக்க | ஆஸ்கருக்கு முன் அமெரிக்காவின் 200 தியேட்டர்களில் வெளியாக இருக்கும் ‘RRR'

மேலும், இந்த நிகழ்ச்சியின் வீடியோக்களையும் இணையத்தில் சினிமா பிரியர்களால் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. தனது நீண்ட வரவேற்புரை கொடுப்பதற்காக ஸ்பெஷலாக இப்படி ஒரு வருகிஅ தந்தது இந்திய சினிமா ரசிகர்களுக்கு பெருமை தரும் வகையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | இந்தி படத்தில் 125 கோடி சம்பளம் வாங்கிய தெலுங்கு பிரபலம்...?