ராமரை இவ்வளவு மோசமாக சித்தரித்துள்ளனர்... கவலை தெரிவித்த தலைமை அர்ச்சகர்...

ராமரை இவ்வளவு மோசமாக சித்தரித்துள்ளனர்... கவலை தெரிவித்த தலைமை அர்ச்சகர்...

அயோதியின் ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகர், ஸ்ரீராமரையும் ஹனுமரையும் மோசமாக சித்தரித்துள்ளதாக கவலை தெரிவித்து, படத்தை தடை செய்யக் கோரிக்கை விடுத்திருக்கிறார்.
Published on

இந்தியாவின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் எதுவென்றால் அது, “ஆதிபுருஷ்” தான். பாலிவுட்டின் ஏமாற்றம் அடைந்த ரசிகர்கள் புதுமை தேடி அலைந்ததன் பலனாக இந்த படம் அமையும் என பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் சமீபத்தில் வெளியானது. வெளியான ஐந்து நிமிடங்கைளிலேயே அனைவரது எதிர்பார்ப்புகளையும் மண்ணில் புதைத்து விட்டது என்றே சொல்லலாம்.

ஏன் என்றால், சிறு வயதில் இருந்தே பார்த்து கற்று தெரிந்த ராமாயண கதையை குழந்தைகளைன் கார்ட்டூனை விட மோசமாக எடுத்திருப்பதாக பல வித விமர்சனங்களை ஆதிபுருஷ் சந்தித்தது. அதிலும், சைஃபலிகானை ராவணனாக தேர்ந்தெடுத்தது தான் மோசமான விமர்சனங்களைப் பெற்றது.

இந்நிலையில், தற்போது, அயோதியின் ராமர் கோவிலின் தலைமை அர்ச்சகர், இந்த படத்தை ‘தடை’ செய்யக் கோரிக்கை வைத்திருப்பது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தலைமை பூசாரி சத்யேந்திர தாஸ், ராமர், அனுமன் மற்றும் ராவணனை தவறாக சித்தரித்ததாகக் கூறப்படும் 'ஆதிபுருஷ்' உடனடியாக தடை செய்யப்பட வேண்டும் என்று கோரினார். அவரைப் பொறுத்தவரை, இதிகாசத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி ராமர், ராவணன் மற்றும் அனுமனை இந்த படம் சரியாக சித்தரிக்கவில்லை, எனவே அவர்களின் கண்ணியத்தை மீறுகிறது என விளக்கம் அளித்தார்.

இதற்கிடையில், மறுபுறம், பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சிங், இந்த மோதல்கள் வேண்டுமென்றே உருவாக்கப்படுகின்றன என்று கூறினார். அவரைப் பொறுத்தவரை, திரைப்படம் எடுப்பது சட்ட விரோதம் அல்ல. கவனத்தை ஈர்ப்பதற்காக வேண்டுமென்றே சர்ச்சையை கிளப்புவது ஏற்புடையது அல்ல என்றும் அவர் கூறினார்.

ஓம் ரவுத் இயக்கிய 'ஆதிபுருஷ்' படத்தில் பிரபாஸ் ராமராகவும், கிருத்தி சனோன் சீதையாகவும் , சைஃபலி கான் ராவணனாகவும், சன்னி சிங் லட்சுமணனாகவும் நடித்துள்ளனர். 2023 ஜனவரியில் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்த படம் வெளியாவதற்கு முன்பே இவ்வளவு நெகட்டிவ் விமர்சனங்களைப் எப்ற்ரு வருவது ரசிகர்களுக்கு கவலை அளிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com