ராமாயணத்த என்னடா பன்னி வச்சிருக்கீங்க?- கதறும் நெட்டிசன்கள்!

ராமாயணம் மோசமாக சித்தரிக்கப்பட்டிருப்பதாக நெட்டிசன்கள் கொந்தளித்து வருகின்றனர். மேலும், அதனை கார்ட்டூன் என்றும் கேலி செய்து வருகின்றனர்.

ராமாயணத்த என்னடா பன்னி வச்சிருக்கீங்க?- கதறும் நெட்டிசன்கள்!

சிறு வயதில் இருந்தே, மத இன வேறுபாடு இன்று நாம் கற்றறிந்து வந்தது இரு பெரும் புராண காவியங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதம் தான். அதிலும், வாழ்க்கை உபதேசங்கள் தரும் மகாபாரத்தை விட ராமாயணம் தான் அதிகமாக இந்திய மக்கள் மனதில் பதிவாகி இருக்கிறது.

பல வகையான நாடகங்கள், படங்கள் என சிறு வயதில் இருந்து தூர்தர்ஷன் மூலமாகவும், பொதிகை தொலைகாட்சி மூலமாகவும் பார்த்து வளர்ந்த 90’ஸ் கிட்சிற்கு பெரும் திருஷ்டி பூசணி போல தற்போது ஒரு ராமாயண சித்தரிப்பு தயாராகி உள்ளது என நெட்டிசன்கள் கடுங்கோவத்தில் கொந்தளித்து வருகின்றனர்.

Image

பாகுபலிக்கு வந்த சோதனை:

பாகுபலி என்ற மாபெரும் ஹிட் படத்தைத் தொடர்ந்து, தெலுங்கு திரையுலகின் நடிகராக இருந்த பிரபாஸ் உலகளவில் பாகுபலி என்றே அறியப்பட்டார். அவர் சாதாரண கமெர்சியல் படங்களில் நடித்தால், மக்களால் ஏற்றுக் கொள்ள கூட முடியாத ஒரு நிலைக்குத் தள்ளப்பட்ட நிலையில், சமீபத்தில் வெளியான ராதே ஷியாம் மற்றும் சாகோ போன்ற சில படங்கள் அவருக்கு ஃப்ளாப் ஆனது. இந்நிலையில், தனது பான் இந்திய ரசிகர்களை திருப்தி படுத்தும் வகையில், ஒரு புராண கதையில் நடித்திருக்கிறார்.

ஆதிபுருஷாக பாகுபலி:

ஓம் ராவத் இயக்கத்தில், குல்ஷன் குமார் மற்றும் டீ-சிரியஸ் இணைதயாரிப்பில் வெளியாக இருக்கும் பிரம்மாண்ட புராண படம்தான் ‘ஆதிபுருஷ்’. ராமாயணத்தை அடிப்படையாக வைத்து, நன்மைக்கும் தீமைக்கும் எதிரான போரை எடுத்துள்ள இந்த பான் இந்திய படமானது, மிகுந்த எதிர்பார்ப்பௌ மக்கள் மத்தியில் கிளப்பியது என்றே சொல்லலாம். அதிலும் படத்தில், ஆதிபுருஷான ராமராக, பாகுபலி பிரபாஸ் நடிப்பதால் மேலும் உற்சாகத்தில் ஆர்வமாக காத்து வந்தனர் ரசிகர்கள்.

Image

மிகுந்த எதிர்பார்ப்பு..

ஒரு பக்கம் ராமாயண காவிய ரசிகர்கள், மற்றொரு பக்கம், பிரபாஸ் ரசிகர்கள், மற்றொரு பக்கம், நம்பிக்கையிழந்த பாலிவுட் ரசிகர்கள் என மிகுந்த எதிர்பார்ப்புடன் காக்க வைத்த ஆதிபுருஷ் படத்தின் அதிகாரப்பூர்வ டீசர், நேற்று, காந்தி ஜெயந்தி அன்று வெளியானது.

Disappointing Adipurush” ஹாஷ்டாக்:

வெளியான அடுத்த ஐந்தாவது நிமிடமே, மக்களின் அனைத்து எதிர்பார்ப்புகளும் மன்னுக்குள் புதைந்தது என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட, குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட கார்ட்டூன் போல இருக்கிறது என பலரும் தற்போது கமெண்ட் செய்து வருகின்றனர். அதோடு, ட்விட்டரில், “Disappointing Adipurush” என ஹாஷ்டாக் போட்டு பதிவுகள் இட்டு வருகின்றனர்.

என்னடா பன்னிவச்சிருக்கீங்க?

ராமராக நடிக்கும் பிரபாஸ் பற்றி நெகட்டிவாக அவ்வளவு கருத்துகள் வரவில்லை என்றாலும், ராவணனாக நடிக்கும் ‘சைஃபலி கான்’ மீது மோசமான கமெண்டுகள் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்,

  • எந்த ஊருல சம்மர் கட் செய்து ராவணன் இருக்கிறார்? என்றும்,

  • இவர் ராவணன் மாதிரி இல்லை, ராவுத் அலிகான் மாதிரி இருக்கிறார் என்றும்,

  • டீசர் வெளியானதும், இது ஏதோ இந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான கதைகளம் என்று நினைத்தால், அதுதான் ராவனனாம்! என்றும்

  • ராவணன என்னடா பன்னி வச்சிருக்கீங்க?

கமெண்ட் செய்து வருகின்றனர்.

Image

ஹை பட்ஜெட் ‘சோட்டா பீம்’:

அது மட்டுமின்றி, வானர குலத்தை, கொரில்லா கூட்டமாகவும், வெறி கொண்ட மிருகச் சண்டை போலவும் அனிமேஷன் செய்திருப்பதாக வருத்தம் தெரிவித்த நெட்டிசன்கள், குழந்தைகளின் கார்ட்டூனான ‘சோட்டா பீம்’ போல படத்தை வடிவமைத்திருப்பதாக தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, படங்கள் பாலிவுட்டில் பெரிதாக வராததையும், வரும் கதைகளும் மோசமாக உருவாகி வருவதாகவும் குற்றச்சாட்டு வைத்த பாலிவுட் ரசிகர்கள், படம் வெளியாவதற்கு முன்பே இவ்வளவு நெகட்டிவ் கமெண்டுகளைப் பெற்று வர, படம் வெளியான பிறகு பெரிய ஃப்ளாப் ஆகி விடுமோ என கவலை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தியில் வெளியாக இருக்கும் இந்த படம் வருகிற 2023ம் ஆண்டு ஜனவரி மாடஹ்ம் வெளியாகும் என படக்குழுவினர் தகவல்களை வெளியிட்ட நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு, முற்றிலுமாக குறைந்து விட்டது என நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

--- பூஜா ராமகிருஷ்ணன்