ஓம்... ரூமுக்கு வாங்க... கோபத்தில் கொந்தளித்த பிரபாஸ்!

இது வரை இல்லாத வகையில், இயக்குனர் ஓம்-மை, தனது அறைக்கு வர சொல்லி பிரபாஸ் கோபமாக அழைக்கும் வீடியோ இணையத்தில் படு வைரலாகி பல விமர்சனங்களை சந்தித்து வருகிறது.

ஓம்... ரூமுக்கு வாங்க... கோபத்தில் கொந்தளித்த பிரபாஸ்!

ஓம் ராவத் இயக்கத்தில், டீ சீரியஸ் மற்றும் குல்ஷன் குமார் இணை தயாரிப்பில் வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் ‘ஆதிபுருஷ்’ படத்தின் டீசர் சமீபத்தில் வெலியாகி கலவையான விமர்சனங்களையே பெற்றது.

மோசமான VFX, தவறான கதாபாத்திரங்கள் தேர்ந்தெடுத்தல் என, பலரது வசைகளையும் கேலிகளையும் படக்குழு சந்தித்தது. குறிப்பாக, ராவணனாக நடிக்கும், சைஃபலி கான் தான் இருப்பதிலேயே அதிகமான வசைகளை வாங்கினார் என்றே சொலல்லாம்.

இந்நிலையில், ராமரின் வாழ்க்கையைக் கூறும் ‘ஆதிபுருஷ்’ படத்தின் டீசரை, ராமர் கோவிலான அயோத்தியில் வைத்து படக்குழு வெளியிட்டு, பெரும் பிரம்மாண்ட விழாவை நடத்தியது.

மேலும் படிக்க | ராமாயணத்த என்னடா பன்னி வச்சிருக்கீங்க?- கதறும் நெட்டிசன்கள்!

சீதையாக நடித்த கிரிதி சேனான் மற்றும் ராமரான பிரபாஸ் இணைந்து கலந்து கொண்ட இந்த விழாவால், மக்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்தது என்றே சொல்லலாம். ஆனால், டீசரால் உருவான ஏமாற்றம், ரசிகர்களது மனதில் பெரும் காயத்தையே உருவாக்கி இருக்கிறது.

டிவ்ட்டரில் தொடர்ந்து இரண்டு நாட்களாக, Disappointing Adipurush” என்ற ஹாஷ்டாக் ட்ரெண்டாகி வரும் நிலையில், தற்போது பிரபாசின் ஒரு வீடியோ படு பயங்கரமாக பகிரப்பட்டு வருகிறது.

இயக்குனர் ஓம் ராவத்தை அழைத்து, “ஓம், நீங்கள் எனது அறைக்கு வருகிறீர்கள்” என கடும் கோபத்தில் அவரை அழைக்கிறார். அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் மோசமான கருத்துகளை பெற்று வருகிறது.

மேலும் படிக்க | ' பிளவுபடட்டும் இந்த பூமியும் ஆகாயமும் ' வெளியானது பிரபாஸின் ஆதிபுருஷ் டீசர்...!

டீசரால் கிடைத்த மோசமான விமர்சனங்களால் கடும் கோபத்தில் இருக்கிறாரா பிரபாஸ், அப்போ, ஓம் அவ்வளவுதானா? என்றேல்லாம் கமெண்ட் செய்து வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

ஜனவரி 12, 2023ம் ஆண்டு ஐமேக்ஸ் மற்றும் 3Dயில் வெளியாக இருக்கும் ‘ஆதிபுருஷ்’ படத்தின் எதிர்பார்ப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருவதால் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. வைரலாகும் அந்த வீட்யோவை நீஙளே பாருங்கள்...

--- பூஜா ராமகிருஷ்ணன்