ரன்பீர் கபூர்-அலியா பட் தம்பதிக்கு பெண் குழந்தை...

ரன்பீர் கபூர்-அலியா பட் தம்பதிக்கு பெண் குழந்தை...

பாலிவுட்டின் நட்சத்திர தம்பதியான ரன்பீர் கபூர், அலியா பட்டிற்கு பெண் குழந்தை பிறந்தது. இதற்கு பல்வேறு திரைப் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Published on

பிரபல பாலிவுட் நடிகர்கள் ரன்பீர் கபூர் ஆலியா பட்  தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்தி திரைத்துறையின் பிரபல நடிகர் ரன்பீர் கபூரும், நடிகை ஆலியா பட்டும் காதலித்து கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில், இன்று மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்ட நடிகை ஆலியா பட்டிற்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை தொடர்ந்து இத்தம்பதியினருக்கு திரைத்துறையினர், ரசிகர்கள் உள்பட பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

திருமணத்திற்கு முன்பே கர்பமாக இருந்ததாக தெரிவித்த நிலையில், பல வகையான சர்ச்சைகளைக் கடந்து வந்த ரன்பீர் ஆலியா ஜோடி, தற்போது ஒரு அழகானௌயிரை இந்த உலகத்திற்கு வரவேற்றதைத் தொடர்ந்து அவர்களது ரசிகர்கள் படு குஷியில் ஆழ்ந்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com