எனது ஜோக்குகள் மோசமாகத் தான் இருக்கும்! மன்னியுங்கள்!- பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ரன்பீர்!!!

சமீபத்தில் ரன்பீர் கபூர் தனது மனைவி ஆலியா பட்டை நேரலையில் கேளி செய்தது, பலரிடம் இருந்தும் விமர்சணத்தைக் கிளப்பியது. இதனைத் தொடர்ந்து ரன்பீர் தர்போது மன்னிப்பு கேட்டுள்ளார்.

எனது ஜோக்குகள் மோசமாகத் தான் இருக்கும்! மன்னியுங்கள்!- பகிரங்கமாக மன்னிப்பு கேட்ட ரன்பீர்!!!

பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், தனது கர்பிணி மனைவியான ஆலியா பட்டுடன், ரசிகர்களிடம் உரையாடிக்கொண்டிருந்த லைவில், ஆலியா பட்டின் பேபி பம்ப் பற்றி ரன்பீரின் நகைச்சுவை பேச்சு பெரும் சர்ச்சையானது. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள், ஆலியாவை உருவ கேலி செய்தது தவறு என கொந்தளித்துள்ளனர். இதற்கு தற்போது ரன்பீர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

திருமணத்தை தொடர்ந்து, இருவருமே படப்பிடிப்புகளில் பிஸியாகினர். இந்நிலையில், ரன்பீர் தனது இன்ஸ்டாக்ராம் பக்கத்தில், விரைவில் "எங்கள் குழந்தை" என கேப்ஷனிட்டு, மகிழ்ச்சியாக ஆலியா, தாயாக போவதை உறுதிப்படுத்தினார். இதற்கு ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வந்தனர். மேலும், ஒரு சிலர் கலவையான விமர்சனங்களையும் கொடுத்திருந்தனர். திருமணமாகி இரண்டு மாதங்களிலேயே 5 மாத கர்பமா என்றெல்லாம் கேள்வி எழுப்பிய நிலையில், ஆலியா வின் ரசிகர்களே அவருக்கு ஆதரவாக பதில் பதிவிட்டது இணையத்தில் பெரும் போர்க்களம் மூண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | பாடி ஷேமிங் செய்கிறாரா ரன்பீர் ...? கொந்தளிக்கும் ரசிகர்கள்...!

இந்நிலையில், சமீபத்தில், அவர்கள் நடித்த பிரம்மாஸ்திரா திரைப்படத்தை ப்ரோமோஷன் செய்வதற்காக, இருவரும் சேர்ந்து சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் நேரடி கலந்துரையாடலில் ஈடுபட்டனர். அப்போது நடிகர் ரன்பீர், ஆலியாவின் பேபி பம்ப்பையும், உடல் எடையையும் பார்த்து, எதார்த்தமாக கேலி செய்துள்ளார். அவரின் அந்த நகைச்சுவை உணர்வு, சர்ச்சைக்கு உள்ளாகியது. இதனை பார்த்த நெட்டிசன்கள், ரன்பீரின் இந்த பேச்சு வெறுக்கத்தக்கது என தங்களது கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.  

அந்த உரையாடலில், ரன்பீரும் ஆலியாவும் ஏன் தங்கள் பிரம்மாஸ்திரா படத்தை பெரிதாக விளம்பரப்படுத்துவதில்லை என்று விவாதித்தனர். அப்போது, அலியா “நாங்கள் படத்தை விரிவாக விளம்பரப்படுத்துவோம்” என கூறிக்கொண்டிருக்கும் போது, ரன்பீர் ஆலியாவின் பேபி பம்பை பார்த்தபடி, “சரி, யாரோ ஒருவர் பெருத்துக்கொண்டே இருப்பதை நான் காண்கிறேன்” என்றார். இதனால் வாயடைத்துப்போன ஆலியாவை ரன்பீர்  முதுகில் தட்டிக் கொடுத்து, “ஜோக்” என்று கூறுகிறார். ரன்பீர் நகைச்சுவையாக இதனை கூறியிருந்தாலும் நெட்டிசன்கள் அவரை வறுத்தெடுத்து வருகின்றனர். ஒரு தாய்மையை இப்படியா கொச்சைப்படுத்துவது என கூறி வருகின்றனர்.

மேலும் படிக்க | 2022இல் கூட பெண்களை இப்படித்தான் கேட்பீர்களா?- மௌனம் கலைத்த ஆல்யா பட்!

Loved Alia Bhatt's mini dress to show baby bump for first time with Ranbir  Kapoor at Brahmastra event? It costs ₹6k | Fashion Trends - Hindustan Times

ஆனால்,  இது குறித்து ஆலியாவும் சரி, ரன்பீரும் சரி எவ்வித கருத்தும் கூறாத நிலையில், தற்போது பகிரங்கமாக ரன்பீர் மேடையில் மன்னிப்பு கேட்டுள்ளார். பிரம்மாஸ்திரா படத்திற்கான பிரமோஷன் வேலைகள் படு பயங்கரமாக நடந்து வரும் நிலையில், படத்தின் தமிழ் பதிப்பை விளம்பரப்படுத்த ரன்பீர், படக்குழுவினருடன் சென்னை வந்திருந்தார். அங்கு பத்திரிக்கையாளர்களை சந்தித்த போது, படம் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.

நிகழ்வில் பேசிய ரன்பீர், “ஆலியா பட்டை இந்தப் படத்தில்தான் சந்தித்தேன். இந்தப் படத்தின் போதுதான் இருவரும் காதலித்தோம். இந்தப் படம் முடியும்போது எங்களுக்கு திருமணமே முடிந்து விட்டது. மேலும், விரைவில் குழந்தையை எதிர்பார்த்திருக்கிறோம். இதிலிருந்தே இந்தப் படத்திற்காக எத்தனை வருடங்கள் நாங்கள் உழைத்திருக்கிறோம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.” எனத் தெரிவித்தார்.

பின், பத்திரிக்கையாளர் ஒருவர், ஆலியா பட் சர்ச்சை குறித்து விளக்கம் கேட்டதற்கு, “எனக்கு ஹூமர் சென்ஸ் மிகக்குறைவு. நான் அடிக்கும் ஜோக்குகள் சில நேரம் மிகவும் மோசமாக இருக்கும். ஆனால், நான் ஆலியாவிடம் கூறியது சிலரைக் கோபமடைய வைத்தது. கோபத்தைத் தூண்ட நான் எதுவும் கூறவில்லை. அப்படி யார் மனதையாவது புண்படுத்தி இருந்தால் மன்னியுங்கள். ஆனால், இதனை நான் ஆலியாவிடம் கூறிய போது சிரித்து கேளி செய்தார். இதனை தட்டி விடுமாறும் கூறினார். இது இவ்வளவு பெரிய சர்ச்சையாகும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை” என்று கூறினார்.

ஏற்கனவே, திருமணமான சில நாட்களிலேயே பல மாத கர்ப்பிணியாக இருக்கிறார் ஆலியா என பல விமர்சணங்கள் எழுந்த நிலையில், தற்போது பேசிய ரன்பீரின் கருத்து பலரால் ஏற்றுக் கொள்ளப்படாமல், பேசுபொருளாகியுள்ளது.

Epic! SS Rajamouli, Ranbir Kapoor and Nagarjuna promote Brahmastra in  Chennai - Movies News