”அனுஷ்காவா? ஆலியாவா? காத்ரீனாவின் பதில்!!!

”அனுஷ்காவா? ஆலியாவா? காத்ரீனாவின் பதில்!!!

காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கரண் ஜோஹரின் புதிய விருந்தினராக வந்த கத்ரீனா கைஃப், நிகழ்ச்சியின் போது அனுஷ்கா ஷர்மா மற்றும் ஆலியா பட் உடனான அவரது உறவை வெளிப்படுத்தியுள்ளார். 

ரேபிட் ஃபயர் ரவுண்டின் போது, ​​அவரிடம், "நீங்கள் அதிகம் இணக்கமான நண்பராக நினைக்கும் நடிகை  ஆலியாவா அல்லது அனுஷ்காவா?"  என்ற கேள்விக்கு கத்ரீனாவின் பதில்: "ஒரு மாலை வேளையில் காபி அரட்டையில் வேடிக்கையான பல நேரங்களில் ஆலியா. கொஞ்சம் தீவிரமான விஷயங்கள், தியானம், ஆன்மீகம் போன்றவை குறித்து யாரிடமாவது பேச விரும்பினால் அது அனுஷ்கா."

அனுஷ்காவும் விராட்டும் உங்கள் அண்டை வீட்டாரா என்ற கேள்விக்கு  ​​"ஆம், அவர்கள் என்னுடன் ஒரே கட்டிடத்தில் வசிக்கிறார்கள்" என்று கத்ரீனா கூறியுள்ளார்

 "உங்கள் அண்டை வீட்டாருடன் நீங்கள் வேடிக்கையான உறவு கொண்டிருக்கிறீர்களா" என்ற கேள்விக்கு  "ஆம்" என்று பதிலளித்துள்ளார் காத்ரீனா.  மேலும் "நல்ல அண்டை வீட்டார் இருக்க வேண்டும் என்பது மிக முக்கியமானது”எனவும் கூறியுள்ளார்.

கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் திருமணம் செய்துகொண்டபோது, ​​அனுஷ்கா ஷர்மா பதிவிட்டிருந்த வாழ்த்து: "அழகான உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள்! உங்கள் வாழ்நாள் முழுவதும் ஒற்றுமை, அன்பு மற்றும் புரிதலுடன் இருக்க வாழ்த்துக்கள். மேலும் நீங்கள் இறுதியாக திருமணம் செய்து கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன். விரைவில் நீங்கள் உங்கள் வீட்டிற்குச் செல்லலாம்"

கத்ரீனா கைஃப் மற்றும் விக்கி கௌஷல் இருவரும் திருமணத்திற்குப் பிறகு மும்பையின் ஜூஹூவில் உள்ள கடல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறினர். ஜீரோ மற்றும் ஜப் தக் ஹை ஜான் ஆகிய படங்களில் அனுஷ்கா ஷர்மாவுடன் கத்ரீனா கைஃப் இணைந்து நடித்துள்ளார் . கத்ரீனாவும் ஆலியாவும் முதன்முறையாக பிரியங்கா சோப்ரா நடிக்கும் ஜீ லே ஜரா படத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனர். கத்ரீனாவும் ஆலியாவும் நீண்ட காலமாக உடற்பயிற்சி செய்யும் நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

கத்ரீனா கைஃப் 2 வருட டேட்டிங்கிற்கு பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விக்கி கௌஷலை திருமணம் செய்து கொண்டார் . அவர்கள் ராஜஸ்தானின் சவாய் மாதோபூரில் பெரிய, விமரிசையாக திருமணம் செய்து கொண்டனர்.