சந்திரபாபு நாயுடு வீட்டின் முன் போகி கொண்டாடிய நடிகர் பாலகிருஷ்ணா...

சந்திரபாபு நாயுடு வீட்டின் முன் போகி கொண்டாடிய நடிகர் பாலகிருஷ்ணா...
Published on
Updated on
1 min read

திருப்பதி | தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் நந்தமுரி பாலகிருஷ்ணா. பல ஆண்டுகளாக தெலுங்கு திரையுலகில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்து, மூன்று தலைமுறையினரின் சூப்பர் ஸ்டாராக திகழும் நந்தமுரியின் சமீபத்திய படம் தான், வீரசிம்ஹ ரெட்டி.

பிரபல தெலுங்கு பட இயக்குனரான கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் நவீன் யேர்னேனி மற்றும் ரவி ஷங்கரின் மைத்ரி மூவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவான பிரம்மாண்ட கமர்சியல் படமான வீரசிம்ஹ ரெட்டி படத்தில், இரட்டை வேடத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணா நடித்திருக்கிறார்.

அவருக்கு ஜோடியாக, ஹனி ரோஸ் மற்றும் ஷ்ருதி ஹாசன் ஆகியோரும், அவரது தங்கையாக வரலட்சுமி சரத்குமாரும் நடித்திருக்கின்றனர். தந்தை மற்றும் மகனாக இந்த வயதிலும், ரசிகர்களை கவரும் வண்ணம் ஸ்டண்டு காட்சிகள் மற்றும் ரொமான்ஸில் தெரிக்க விட்ட பாலகிருஷ்ணாவிற்கு ரசிகர்களின் விசில்களே பெரும் பரிசு என்று சொல்லலாம்.

தமிழர்களுக்கு பொங்கல் போல, தெலுங்கு விவசாயிகளுக்கான பெரும் விழா தான் சங்கராந்தி. அந்த விழாவைக் கொண்டாட, நந்தமுரி தயாராகி வருகிறார். நமது போகி போல, அவர்களுக்கு லோரி எனப்படும் பண்டிகை உள்ளது. பழையன கழிதலைப் புகட்டும் இந்த பண்டிகையை, நந்தமுரி, சந்திரபாபு நாய்டு வீடு முன்பு கொண்டாடியுள்ளார்.

இன்று அதிகாலை திருப்பதி அருகே நாராவாரிபள்ளி கிராமத்தில் ஜாக்கிங் மேற்கொண்ட அவர், அந்த பகுதியில் இருக்கும் சந்திரபாபு நாயுடு வீட்டின் முன் போகி கொண்டாடினார்.

அப்போது பேசிய அவர் மாநிலத்தில் சிறப்பான ஆட்சி ஏற்பட இறைவன் அருள் புரிய வேண்டும் என்று கூறினார். மேலும் தன்னுடைய நடிப்பில் வெளியாகி திரையிடப்பட்டிருக்கும் வீரசிம்மா ரெட்டி திரைப்படத்திற்கு ஆதரவு அளிக்கும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com