யார் இந்த திவிதா ராய்? பிரபஞ்ச அழகி போட்டியில் போட்டியிடும் தென்னிந்திய பெண் பற்றி தெரிந்து கொள்ளலாம்...

பிரபஞ்ச அழகி போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் அழகி திவிதா ராய் பற்றி தெரிந்து கொள்ளலாமா?

யார் இந்த திவிதா ராய்? பிரபஞ்ச அழகி போட்டியில் போட்டியிடும் தென்னிந்திய பெண் பற்றி தெரிந்து கொள்ளலாம்...

மிஸ் யுனிவர்ஸின் 71வது பதிப்பின் இறுதிப் போட்டி, இந்திய நேரப்படி ஜனவரி 15, காலை 6:30 மணிக்கு நியூ ஆர்லியன்ஸில் எர்னஸ்ட் என். மோரியல் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற உள்ளது.

உலகம் முழுவதிலுமிருந்து 80 க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் அமெரிக்காவின் லூசியானா, நியூ ஆர்லியன்ஸில் உள்ள எர்னஸ்ட் என். மோரல் கன்வென்ஷன் சென்டரில் கிரீடத்திற்காக போட்டியிடுவார்கள்.

பிரபஞ்ச அழகி போட்டியின் 71வது பதிப்பில் இந்தியா சார்பில் திவிதா ராய் பங்கேற்றுள்ளார். தேசிய ஆடை சுற்றுக்கு, திருமதி ராய் தங்க நிற உடையில் அனைவரது கவனத்தையும் பெற்றார்.

மேலும் படிக்க | திருமதி உலக அழகி போட்டி..! 21 ஆண்டுகளுக்கு பின் பட்டத்தை தட்டித் தூக்கிய இந்திய பெண்..!

அபிஷேக் ஷர்மா வடிவமைத்த இந்த ஆடை, ' சோனே கி சிடியா ' - 'இந்தியாவை தங்கப் பறவை’ என்ற தலைப்பில் வெளிப்படுத்தப்பட்டது. இது பன்முகத்தன்மையுடன் இணக்கமாக வாழும் ஆன்மீக சாரத்துடன் நமது வளமான கலாச்சார பாரம்பரியத்தின் செல்வத்தின் சின்னம் என கூறினார்.

ஆகஸ்ட் 28, 2022 அன்று மிஸ் திவா யுனிவர்ஸ் 2022 பட்டத்தை வென்ற 23 வயதான திவிதா ராய், கர்நாடகாவை சேர்ந்தவர். வாழ்க்கையில் திவிதாவின் குறிக்கோள் "மாற்றத்திற்கு அஞ்சாதீர்கள், வாழ்க்கையைத் தழுவி, ஒவ்வொரு கணத்தையும் முழுமையாக வாழுங்கள்" என்பது தான்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | முதன் முறையாக விமானத்தில் நடக்க இருக்கும் ‘ஃபேஷன் ஷோ’...