வண்டலூரில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்த பார்வையாளர்கள்...

வண்டலூர் உயிரியல் பூங்காவில், புத்தாண்டிற்காக குவிந்த பார்வையாளர்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்தனர்.

வண்டலூரில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வரிசையில் காத்திருந்த பார்வையாளர்கள்...

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் சுமார் 2500 க்கும் மேற்பட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகிறதுஇயற்கையோடு அமைந்த பூங்கா விற்கு தினந்தோறும் பார்வையாளர்கள்  வந்து செல்வார்கள்.

அந்த வகையில் தற்போது கடந்த 24ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை தினம் என்பதாலும் இன்று புத்தாண்டு என்பதாலும் பார்வையாளர்கள் காலை முதல் வண்டலூர் பூங்காவிற்கு பார்வையாளர்களின் வருகை அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க | புதிய இலாக்கா ஒதுக்கப்பட்ட அமைச்சர் கிளாம்பாக்கத்தில் ஆய்வு..!

சுற்றுலா தளமாக விளங்கும் வண்டலூர் பூங்காவிற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் இன்றி சென்னை வரக்கூடிய அனைவருமே வண்டலூர் பூங்காவிற்கு இங்கு வந்துள்ளனர்.

இங்குள்ள யானை மற்றும் புலிகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போது புத்தாண்டு விடுமுறை எதிரொலியாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்களது செல்போன்களில் செல்பி எடுத்துக் கொண்டும் விலங்குகளைக் கண்டு ரசித்துக் கொண்டும் ஆரவாரம் செய்து மகிழ்ந்து வருகின்றனர்.

இதற்கிடையே போதிய அளவு கவுண்டர்கள் இல்லாததால் சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து நுழைவுக் கட்டணத்தை பார்வையாளர்கள் வாங்கிக் கொண்டு விலங்குகளை கண்டு ரசித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | ப்பா.. படத்துல கூட இவ்வளவு அழகா இருக்குமான்னு தெரியல...