புலி தாக்கியதில் 2 மாடுகள் பலி...

சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி அருகே புலி தாக்கி 2  பசுமாடு பலி மற்றும் ஒரு மாடு படுகாயம் அடைந்ததால் விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.

புலி தாக்கியதில் 2 மாடுகள் பலி...

ஈரோடு | சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இதில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தாளவாடி  வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள், அவ்வப்போது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, காவல் நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

இந்தநிலையில் தாளவாடி அடுத்த சேஷன்நகர்  பகுதியை சேர்ந்தவர் சிவராஜ்  (37) 2 மாடுகள் வளர்த்து வருகிறார். இன்று காலை வீட்டின் முன் கட்டியிருந்த 1 பசுமாட்டை காணாவில்லை. மற்றொரு பசுமாடு ஏதே ஒரு விலங்கு கடித்து படுகாயத்துடன் இருந்தது.

மேலும் படிக்க | நான் எங்கு சென்றாலும் நான் ஒரு ஆர்எஸ்எஸ்காரன் - சி.பி. ராதாகிருஷ்ணன்

இதுபற்றி தாளவாடி  வனத்துறையினருக்கு விவசாயி சிவர்ஜ் தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் படுகாயம் அடைந்த பசு மாட்டினை ஆய்வு செய்தனர்.

பின்னர் காணாமல் போன பசுமாட்டை வனத்துறையினர் மற்றும் விவசாயிகள் தேடினார்கள். சேஷன் நகர் அருகே மானாவாரி நிலத்தில் காணாமல் போன பசுமாடு இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு இறந்த மாட்டினை வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.

மேலும் படிக்க | கோவை நீதிமன்ற வளாக கொலை சம்பவம்; 5 பேர் கைது

அதே போல் அப்பகுதியில் பதிவான கால்தடயங்களை ஆய்வு செய்தனர். இதில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புலி பசுமாட்டை கடித்து கொன்றதும், மற்றொரு பசு மாட்டை கடித்து படுகாயப்படுத்தியதும் தெரியவந்தது.

அதே போல் இரண்டு நாட்கள் முன்பு காணாமல் போன விவசாயி கெய்சர் என்வரின் பசுமாட்டின்  எழும்பு கூடுகள் மட்டுமே அப்பகுதியில் கிடைத்ததுபுலி பசு மாட்டை அடித்துக் கொன்ற சம்பவத்தால், அப்பகுதி விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். புலியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் படிக்க | ”இதற்கு அர்த்தம் மக்கள் மனதில் இருத்து அழித்துவிடலாம் என்பதல்ல....” பிரதமரை கடுமையாக தாக்கி பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்!!!