நான் எங்கு சென்றாலும் நான் ஒரு  ஆர்எஸ்எஸ்காரன் - சி.பி. ராதாகிருஷ்ணன்

பாஜக தொண்டன் எனும் நிலையிலிருந்து பரிணாம வளர்ச்சியாக அடுத்த நிலைக்கு செல்கின்றேன்  என சி.பி. ராதாகிருஷ்ணன் பெருமிதத்துடன் கூறினார்
நான் எங்கு சென்றாலும் நான் ஒரு  ஆர்எஸ்எஸ்காரன் - சி.பி. ராதாகிருஷ்ணன்
Published on
Updated on
2 min read

சீறி வரும் சிங்கத்தை  தடுத்து நிறுத்தும் சக்தி எவருக்கும் இல்லை

இல.கணேசன் , தமிழிசை , சி.பி. ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் கட்சிப்பணியை விட்டுச் செல்கின்றனரே என பலர் கேட்கின்றனர். ஆனாலும்  நாங்கள் சென்றாலும்
தமிழக பாஜக மகத்தான் இயக்கமாக தனது பயணத்தை தொடரும் புதிய சிகரங்களை பாஜக தொடும் ,  அண்ணாமலையின் தலைமை அப்படிப்பட்டதாக இருக்கிறது. அண்ணாமலை எனும் சீறி வரும் சிங்கத்தை  தடுத்து நிறுத்தும் சக்தி எவருக்கும் இல்லை. 
அண்ணாமலை நேற்றுவரை தலைவராக இருந்தார் , இன்று என் தம்பியாக மாறி உள்ளார். 

தூத்துக்குடியில் நான் படித்தபோது அப்பா எனக்கு அனுப்பிய மணி ஆர்டர் பணத்தை , மீண்டும் திருப்பூருக்கு அனுப்பி வைத்து  கட்சிக்கு செலவிட்டேன். 

மயிலாப்பூர் தொகுதியை கூட்டணியில் கலைஞர் பாஜகவிற்கு தந்தார். இப்போது போல் அப்போது திமுக தன் கூட்டணிக் கட்சிகளுக்கு 25 கோடிக்கு காசோலை தரவில்லை. பாஜக தொண்டர்கள் பி.எப் பணத்தில் லோன் எடுத்து செலவிட்டனர். எதையும் எதிர்பார்க்கலாம் பணியாற்றும் தொண்டர்களின் இயக்கம் பாஜக. 

இல. கணேசன், கிருபாநிதி , எச்.ராஜா , பொன் ராதாகிருஷ்ணனுடன் இணைந்து பணியாற்றியது , திருநாவுக்கரசர் , கா.சே.ராமசந்திரன் , காசி முத்துமாணிக்கம் இணைந்து பணியாற்றியதை மறக்க முடியாது.அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்..' என்பார்கள் .

மாற்று இயக்கத்திற்கு சென்றாலும் அவர்களை மாறு கண் கொண்டு பார்க்க கூடாது

நேர்கொண்ட பார்வை மாறாமல் இருந்தால்தான் இயக்கம் மகத்தான வெற்றி பெறும் . அரசியல  என்பது ஒருநாள் நிகழ்வு அல்ல, நீண்ட பயணம்.ஜெயலலிதாவை பார்த்து வியக்க காரணம் நாம் சொல்வதை அவர் நொடியில் கிரகித்து கொள்வார். மிகப்பெரும் தோல்வியை முந்தைய நாள் இரவில்  கேட்டாலும் , மறுநாள் காலை முரசொலியில் கருணாநிதி  உத்வேகத்தோடு எழுதுவார். மாற்று சிந்தனை கொண்டோருக்கும் முக்கியத்துவம் தர சொன்னவர் வாஜ்பாய் . கி. வீரமணி மாற்று சிந்தனை கொண்டவராக இருந்தாலும்...ஒரு க்... வைத்து எனக்கு வாழ்த்து சொல்லியிருந்தார்.

நான் எங்கு சென்றாலும் நான் ஒரு  ஆர்எஸ்எஸ்காரன் என்பதை பெருமையாகச் சொல்வேன் , உலகின் வல்லரசாய் பாரத தேசம் உயர்ந்திட வேண்டும். பஞ்சத்திலிருந்தவர்கள் உலகிற்கு அள்ளிக் கொடுக்கும் வகையில் உயரக் காரணம் மோடி. 

மாற்று இயக்கத்தவர்களின் நல்ல கருத்தையும் நமதாக்கி கொள்ள வேண்டும். யாரிடம் எந்த பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்று கண்டறிந்து பொறுப்பை வழங்க வேண்டும் என்றார் அண்ணா. அண்ணாமலை தலைமை அது போல இருக்கிறது. அனைவரையும் அரவணைத்து , அனைவரிடமிருந்தும் வேலை வாங்கும் திறமை அண்ணாமலைக்கு இருக்கிறது. 

மற்றவர்களிடம் இல்லாத நற்குணம் அண்ணாமலைக்கு இருக்கிறதென்றால் அது யாரைப் பார்த்தாலும் அவர்களது மனதில் இடம் பிடிக்கும் வகையில் அன்பான சொல்லுக்கு செந்தக்காரராக இருக்கிறார். நேர்மைக்கு போராடும் மகத்தான தலைவராக அண்ணாமலை இருக்கிறார் .தமிழர்கள் பெருமையை  உலகறிய செய்யும்  விதமாக நான் பணியாற்ற அனைவரின் அன்பும்,  பிரார்த்தனையும் வேண்டும். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com