”இதற்கு அர்த்தம் மக்கள் மனதில் இருத்து அழித்துவிடலாம் என்பதல்ல....”  பிரதமரை கடுமையாக தாக்கி பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்!!!

”இதற்கு அர்த்தம் மக்கள் மனதில் இருத்து அழித்துவிடலாம் என்பதல்ல....”  பிரதமரை கடுமையாக தாக்கி பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்!!!

பிரதமரின் பேச்சு முழுக்க முழுக்க சொல்லாடல்கள் நிறைந்ததாக இருந்ததாகவும், ஆனால் பிபிசி ஆவணப்படம் அல்லது அதானி விவகாரம் குறித்து அவரிடம் எந்த விளக்கமும் இல்லை என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

பேசும் கலை:

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆகியோரை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.  காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி சமீபத்தில் தனது நாடாளுமன்ற உரையில் எழுப்பிய பல கேள்விகள் குறித்தும்ம், பலருடைய கேள்விகளுக்கும் பதிலளிக்காமல் மணிக்கணக்கில் பேசும் கலையை பிரதமரிடம் இருந்து கற்றுக்கொண்டேன் எனக் கூறியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.

மக்களே கவசம்:

 மேலும் பிரதமர் மீதும் பாஜக அரசு மீதும் பல குற்றச்சாட்டுகள் உள்ளன இருந்தும் அவர் எதற்கும் பதிலளிக்கவில்லை எனக் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின் மக்களின் நம்பிக்கையையே அவரது பாதுகாப்பு கவசம் என்று அவர் கூறி வருகிறார் எனப் பேசியுள்ளார்.  ஆனால் மக்கள் அப்படி நினைக்கவில்லை எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

நேரடி குற்றச்சாட்டு:

அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகள் மத்திய பாஜக அரசுக்கு எதிரான நேரடி குற்றச்சாட்டுகள் எனவும் இந்திய தலைமை நீதிபதி தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு கூட இந்த வழக்கை தீவிரமாக விசாரித்து வருகிறது எனவும் கூறிய முதலமைச்சர் இது குறித்த விவாதம்  நாடாளுமன்றத்தில் நடத்தப்பட வேண்டும் என்று பேசியுள்ளார்.  மேலும் நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

அதிர்ச்சியான செயல்:

பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகள் சபாநாயகரால் நீக்கப்பட்டது, பழைய கட்சியினரின் எதிர்ப்புக்கு வழிவகுத்ததுடன் "உண்மையானது மற்றும் செல்லுபடியாகும்" என்று பிரதமர் கூறாதது "அதிர்ச்சி அளிக்கிறது" எனவும் தெரிவித்துள்ளார்.  

மக்கள் மனதில்:

ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோரது பெயர் நாடாளுமன்ற பதிவேடுகளில் இருந்து நீக்கப்பட்டது என்பது மக்கள் மனதில் இருந்து அவர்களை நீக்கிவிடலாம் என்று அர்த்தமில்லை என்றும் கூறியுள்ளார்.

பழிவாங்கும் செயல்:

எதிர்க்கட்சிகளுக்கு எதிராக பழிவாங்கும் அரசியல் செய்வதை முதன்முறையாக ஒரு பிரதமர் நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொண்டுள்ளார் என்பது நாட்டுக்கு நல்லதல்ல எனவும் ஜனநாயகத்திற்கு நல்லதல்ல எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடியின் நடவடிக்கைகள் குறித்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனமும் கண்டனமும் தெரிவித்து தெரிவித்துள்ளதன் சுருக்கமே இது.  தொடர்ந்து திமுக பிரதமர் மோடி தலைமையிலான அரசை எதிர்க்கும் என்பதையே இது காட்டுவதாக உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  பாஜகவின் சங்கல்ப் பத்ரா.... இலவச இருசக்கர வாகனமா?... தேர்தல் அறிக்கை கூறுவதென்ன?!!