கார்த்திகையில் விமர்சையாக நடந்த முருகன் கோவில் கும்பாபிஷேகம்...

கார்த்திகை மாதத்தில், விராச்சிலை கல்யாண முருகன் திருக்கோவில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
கார்த்திகையில் விமர்சையாக நடந்த முருகன் கோவில் கும்பாபிஷேகம்...
Published on
Updated on
1 min read

புதுக்கோட்டை | திருமயம் அருகே உள்ள விராச்சிலை அருள்மிகு வள்ளி தெய்வானை உடனுறை கல்யாண முருகன் திருக்கோவில் மகாகும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. மங்கல இசையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவில் தொடர்ந்து கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றதோடு, விக்னேஸ்வரர் பூஜை லட்சுமி பூஜை, கோ பூஜை, உள்ளிட்ட பல்வேறு பூஜைகளும் நடைபெற்றன.

தொடர்ந்து ஆறு கால யாகசாலை பூஜைகளும் நடைபெற்றன. பல்வேறு புனித தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கலசங்களில் அடைக்கப்பட்டு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து மங்கல இசை வாத்தியங்கள் முழங்க சிவாச்சாரியார்கள் பூஜிக்கப்பட்ட புனிதநீரை தலையில் சுமந்து கோவிலை சுற்றி வலம் வந்து விமானத்தில் புனித நீரை ஊற்றினர்.

இந்நிகழ்வில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டார்.இந்நிகழ்வில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பனையப்பட்டி காவல் துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com