மழையாய் இருந்தால் என்ன? மஹா கும்பாபிஷேகத்தில் குவிந்த பக்தர் கூட்டம்...

ஆர்.கே.பேட்டை அருகேலட்சுமி வரசித்தி விநாயகர் திருக்கோயில் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கொட்டும் மழையில் நடந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மழையாய் இருந்தால் என்ன? மஹா கும்பாபிஷேகத்தில் குவிந்த பக்தர் கூட்டம்...
Published on
Updated on
1 min read

திருவள்ளூர் :  திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட ஆர்.கே.பேட்டை தாலுக்கா பகுதியை சார்ந்த சிம்மராஜபுரம் கிராமத்தில்  புராதன லட்சுமி  வரசித்தி விநாயகர் திருக்கோயில் திருப்பணிகள்  நடைபெற்று மூன்று நாட்கள் மஹா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

மஹா கும்பாபிஷேக விழா யொட்டி  கோயில் வளாகத்தில் யாகசாலைகள் அமைத்து  ஹோம குண்ட பூஜைகள் நடைபெற்றது. இன்று காலை மஹா பூர்ணாஹுதி பூஜைகள் தொடர்ந்து மேள தாளங்கள் முழங்க புனித நீர் கலசங்கள் புறப்படு நடைபெற்றது.

கொட்டும் மழையும்  கிராமமக்கள் பொருட்ப்படுத்தாமல்  பெரும் திரளாக பங்கேற்றனர். கோபுர கலசத்திற்கு புனித நீரால்  மஹா கும்பாபிஷேகம் செய்யப்பட்டு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது.

இதனை அடுத்து லட்சுமி வரசித்தி விநாயகருக்கு  அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு மலர் அலங்காரத்தில் மஹா தீபாராதனை தொடர்ந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.  திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com