ஆஞ்சநேயர் கோயிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா...

திருவாய்மூர் அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் ஆலயத்தில் அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடைபெற்றது. அதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஆஞ்சநேயர் கோயிலில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா...
Published on
Updated on
1 min read

நாகை : திருக்குவளை தாலுகா திருவாய்மூர்  கிராமத்தில் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில்   அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு  நவம்பர் மாதம் 11ம் தேதி   விக்னேஸ்வர பூஜையுடன், பூமி பூஜை, பாலிகை சோமகும்பபூஜை நடைப்பெற்றது.

அதனைத்தொடர்ந்து, வாஸ்து சாந்தி, யாகசாலை பிரவேசம் மற்றும் முதல் கால யாக பூஜை  நடைபெற்றது. லட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனத்துடன் யாகசாலை  பூஜையுடன் மகா பூர்ணாஹுதி நடைபெற்றது.

இதனை தொடர்ந்து இன்று மேளதாளங்கள் முழங்க, சிவாசாரியார்கள் கடத்தை  சுமந்து கோவிலை வலம் வந்து அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் ஆலய  கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மஹாகும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

அதனைத்தொடரந்து   அப்போது புனித நீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. அதனைதொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது இதில் திருவாய்மூர் கிராம மக்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று மனமுருகி வழிபட்டனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com