250 காளைகளை கண்டு களித்த 3000க்கும் மேற்பட்ட மக்கள்...

எருது விடும் திருவிழா தொடங்கிய நிலையில், 250க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றதை 3000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டு களித்து வருகின்றனர்

250 காளைகளை கண்டு களித்த 3000க்கும் மேற்பட்ட மக்கள்...

திருப்பத்தூர் | வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி கிராமத்தில் எருது விடும் திருவிழா தொடங்கியது இதில் 200-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன மருத்துவ பரிசோதனைக்கு பின்பு அவிழ்த்து விடும் காளைகள் வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்து.

குறிப்பிட்ட இலக்கை குறுகிய மணிதுளிகளில் கடக்ககூடிய காளைக்கு முதல் பரிசாக 60,000, ஆயிரம் ரூபாய் பரிசு என மொத்தம் வெற்றி பெரும் காளைகளுக்கு 45-க்கும் மேற்பட்ட பரிசு தொகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | 41ம் ஆண்டு மாபெரும் எருது விடும் திருவிழா கொண்டாடிய கிராமம்...

இப்போட்டியில் பங்கேற்பதற்காக திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்து காளைகளை கொண்டு வந்துள்ளனர்.

மேலும் ஆந்திர மாநிலத்தில் இருந்தும் ஏராளமான காளைகள் போட்டியில் கலந்து கொண்டுள்ளது. இந்த  எருது விடும் திருவிழாவை காண 3000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கண்டுபிடித்து வருகின்றன.

மேலும் படிக்க | இந்த ஆண்டு நடைபெறும் 3-வது ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்...

விழாவில் பாதுகாப்பிற்காக திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் புஷ்பராஜ் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

விழாவை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட கலெக்டர் பாஸ்கர் பாண்டியன் அப்போது பேசியவர் தமிழர்களின் வீர விளையாட்டு ஆன ஜல்லிக்கட்டு மட்டும் எருது விடும் விழாவை கண்டுகளிக்க கூடிய மக்கள் பாதுகாப்பாகவும் மாவட்டத்திற்கு முழு ஒத்துழைப்போடு இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

மேலும் படிக்க | மனிதாபம் மறந்த மனிதர்களின் செயலால் அவதிக்குள்ளான மாடுகள்...