இந்த ஆண்டு நடைபெறும் 3-வது ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்...

திருச்சியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய வீரர்கள் பரிசுகளை அள்ளிச் சென்றனர்.

இந்த ஆண்டு நடைபெறும் 3-வது ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்...

பொங்கல் பண்டிகையையொட்டி  திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில் இன்று காலை 9- மணிக்கு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது.

ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, மணிகண்டம் ஒன்றியம் பெருந்தலைவர்  கருப்பையா மற்றும்  வருவாய் துறையினர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

மேலும் படிக்க | மனிதாபம் மறந்த மனிதர்களின் செயலால் அவதிக்குள்ளான மாடுகள்...

இந்த ஜல்லிக்கட்டில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தேனி, புதுக்கோட்டை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 700 - காளைகளும்,  ஜல்லிக்கட்டு காளைகளை அடக்க 450- மாடுபிடி வீரர்களும் பங்கேற்று களம் கண்டு வருகின்றனர்.

இதில் மாடுபிடி வீரர்களுக்கு  கட்டில் அண்டா குக்கர் செல்போன் தங்க காசு வெள்ளி காசு உள்ளிட்டவைகள் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும் களத்தில் மாடுபிடி வீரர்களிடம் சிக்காமல் செல்லும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு....வெற்றிகளும் பரிசுகளும்....