மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து நேரடி செயல் விளக்கம்...

மயிலாடுதுறை மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து நேரடி செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து நேரடி செயல் விளக்கம்...

மயிலாடுதுறை | நாகப்பட்டினம் மாவட்டத்திலிருந்து மயிலாடுதுறை மாவட்டம் பிரிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில் ஆயுதப் படையை உள்ளிட்ட பல்வேறு நிர்வாகங்கள் நாகப்பட்டினம் காவல்துறை கீழே இருந்து வந்தது. இந்நிலையில் சமீபத்தில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு என்று ஆயுதப்படை உருவாக்கப்பட்டது.

மேலும் படிக்க | சமையல் அறையில் ஓய்வு எடுத்த பாம்பு...

இதில் 57 பெண்கள் உட்பட 252 பேர் ஆயுதப்படை காவலர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஐந்து காவல் உதவி ஆய்வாளர்கள் ஒரு காவல் ஆய்வாளர் ஒரு டிஎஸ்பி ஆகியோர் மயிலாடுதுறை மாவட்ட அதிரடிப்படை போலீசில் பணியில் உள்ளனர். இந்த காவலர்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து தீயணைப்பு துறை வீரர்கள் இன்று நேரடி செயல் விளக்கம் அளித்தனர்.

மேலும் படிக்க | சென்னை காமராஜர் சாலையில் திடீர் போக்குவரத்து மாற்றம்...தமிழக அரசின் அதிரடி முடிவு!

கயிறுகளை பயன்படுத்தி உயிர்களை காப்பது தீயை கட்டுப்படுத்தி சேதத்தை தவிர்ப்பது விபத்தில் சிக்கியவர்களுக்கு முதலுதவி அளிப்பது, உள்ளிட்ட பல்வேறு வகைகள் குறித்து நேரடியாக செயல் விளக்கம் அளித்தனர். மயிலாடுதுறை தீயணைப்பு துறை அதிகாரி முத்துக்குமார் உள்ளிட்டோர் பயிற்சியில் பங்கேற்றனர்.

மேலும் படிக்க | ஆற்றில் தத்தளித்த மூதாட்டியை பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை...