சென்னை காமராஜர் சாலையில் திடீர் போக்குவரத்து மாற்றம்...தமிழக அரசின் அதிரடி முடிவு!

நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகின்ற 26ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை காமராஜர் சாலையில் குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது.
குடியரசு தின விழா:
ஆண்டுதோறும் குடியரசு தின விழா காந்தி சிலை அருகே நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அப்பகுதியில் மெட்ரோ பணிகள் நடைபெறுவதால் வருகின்ற 26 ஆம் தேதி குடியரசு தின விழா உழைப்பாளர் சிலை அருகே நடைபெறவுள்ளது.
ஒத்திகை நிகழ்ச்சி :
அதன்படி, நாடு முழுவதும் குடியரசு தின விழா வருகின்ற 26ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை காமராஜர் சாலையில் இன்று முதல் வரும் 24 ஆம் தேதி வரை குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை நடைபெற உள்ளது. அந்த வகையில் இன்று குடியரசு தின விழா ஒத்திகை நடைபெற்று வருகிறது.
இதையும் படிக்க : ஈரோடு சட்டமன்ற தொகுதி யாருக்கு..... பேச்சுவார்த்தையின் முடிவு என்ன?!!!
20 அரசு வாகனங்கள் பங்கேற்பு :
இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் முப்படை , தேசிய மாணவர் படை , மத்திய தொழில் பாதுகாப்பு படை , காவல் துறை , தீயணைப்புதுறையினரின் அணிவகுப்பு இடம்பெற்றது. மேலும், தமிழக அரசின் 20 துறைகள் சார்ந்த வாகனங்களும் அணிவகுப்பில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
கலை நிகழ்ச்சிகளின் ஒத்திகை :
இதனையடுத்து, கொரோனா காரணமாக குடியரசு தின விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு கலை நிகழ்ச்சிகள் இடம்பெறுகிறது. அதன்படி, மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சியின் ஒத்திகை இன்று நடைபெற்றது.
போக்குவரத்து மாற்றம் :
இதனிடையே, குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை காரணமாக, காமராஜர் சாலையில் 4 நாட்கள் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.