ஈரோடு சட்டமன்ற தொகுதி யாருக்கு..... பேச்சுவார்த்தையின் முடிவு என்ன?!!!

ஈரோடு சட்டமன்ற தொகுதி யாருக்கு..... பேச்சுவார்த்தையின் முடிவு என்ன?!!!
Published on
Updated on
1 min read

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.  

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவால் காலமானதை அடுத்து பிப்ரவரி 27-ஆம் தேதி அங்கு இடைத் தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.  இதனையடுத்து, இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு, ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி, ஈவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர் உள்ளிட்டோர், கூட்டணி தலைவர் மு.க.ஸ்டாலினை சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.  இதை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுவதாக திமுக தலைமை அறிவித்துள்ளது. 

இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, முதலமைச்சர் உடனான பேச்சுவார்த்தை சமூகமாக இருந்தது என்றும் மகிழ்ச்சியுடன் நிறைவடைந்தது என்றும்  கூறினார்.  மேலும்  வேட்பாளர் குறித்த அறிவிப்பை காங்கிரஸ் தலைமை விரைவில் அறிவிக்கும் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com