சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆளுநரை அநாகரீகமாகப் பேசியதையடுத்து, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தார்.
முதலமைச்சர்- ஆளுநர்:
தமிழ்நாட்டில் ஆளுநர் ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் இடையேயான போர் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. நாளுக்கு நாள் புதிய புதிய சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட திமுக தலைவர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இடைநீக்கம்:
சமீபத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ஆளுநரை அநாகரீகமாகப் பேசியதைத் தொடர்ந்து, திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தார். அதே நேரத்தில், கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக தலைவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆளுநர் உரை:
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இதனிடையே, இந்த ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தில் ஆளுநர் ரவி உரையாற்றிய போது சில குறிப்புகளை விடுத்து பேசியுள்ளார்.
கிருஷ்ணமீர்த்தி பேசியதென்ன?:
இதனால் தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திமுகவின் தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி ”ஆளுநர் ஆர்.என்.ரவி அவரது சட்டமன்ற உரையில் அம்பேத்கரின் பெயரைச் சொல்ல மறுத்தால், அவரைத் தாக்கும் உரிமை எனக்கு இல்லையா” என்று கூறியிருந்தார். அதனோடு “அரசு கூறுவதை நீங்கள் படிக்கவில்லை என்றால், காஷ்மீருக்குச் செல்லுங்கள், நாங்கள் பயங்கரவாதிகளை அனுப்புவோம், அவர்கள் உங்களைக் கொன்றுவிடுவார்கள்.” எனவும் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-நப்பசலையார்