ரசிகர்களிடம் கோபமடைந்த ஜெயா பச்சன்....மௌனம் காத்த அமிதாப் பச்சன்......

ரசிகர்களிடம் கோபமடைந்த ஜெயா பச்சன்....மௌனம் காத்த அமிதாப் பச்சன்......

மனைவி ஜெயா பச்சனின்  நடத்தையால் அனைவர் முன்னிலையிலும் பதிலளிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் அமிதாப் பச்சன்.

பாலிவுட் பேரரசர் அமிதாப் பச்சன் அமைதியான மற்றும் மென்மையான இயல்புக்கு பெயர் பெற்றவர்.   ஆனால் மறுபுறம், அவரது மனைவி ஜெயா பச்சன் அவரது குறுகிய மனநிலைக்கு பெயர் பெற்றவர்.  எப்போதும்  புகைப்படக்காரர்களும் செய்தியாளர்களும் அவருடைய கோபத்திற்கு ஆளாகி கொண்டேயிருக்கின்றனர்.  மீண்டும் ஒருமுறை அதே போன்ற சம்பவம் நடந்துள்ளது. 

தற்போது விஷயம் இந்தூர் விமான நிலையத்தில் நடந்துள்ளது.  அங்கே இருந்த சில ஊழியர்கள் ஜெயா பச்சன் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோரின் படங்களை எடுக்கத் தொடங்கினர்.  அதனைத் தொடர்ந்து ஜெயா பச்சன் கோபத்திற்குள்ளானார்.  முதலில் புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்திய அவர் பின்னர் இவ்வாறு நடந்து கொள்பவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார்.  ஜெயா பச்சனின் இந்த பேச்சில் பிக் பியும் அதிர்ச்சியடைந்தார். 

இந்த முறை ஜெயா பச்சனின் இந்த நடத்தைக்கு அமிதாப் அனைவரின் முன்னிலையிலும் பதிலளித்துள்ளார். அவரது இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  சமீபத்தில் பிக் பி மற்றும் அவரது மனைவி ஜெயா பச்சன் இந்தூர் விமான நிலையத்தை அடைந்த போது விமான நிலைய ஊழியர்கள் அவர்களை வரவேற்க  பூங்கொத்துடன் நின்றனர்.  ஜெயா முன்னோக்கி நகர்ந்தவுடன், ரசிகர்கள் அவரது புகைப்படங்களைக் கிளிக் செய்யத் தொடங்குகியதை பார்த்த ஜெயா பச்சன், 'தயவுசெய்து என்னை புகைப்படம் எடுக்காதீர்கள்.  உங்களுக்கு ஆங்கிலம் புரியவில்லையா? எனக் கேட்டுள்ளார்.  

ஜெயா பச்சன் கோபப்படுவதைப் பார்த்து, அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் புகைப்படம் எடுப்பதை தடுத்து ரசிகர்கள் அவர்களது மொபைலை பயன்படுத்த வேண்டாம் எனவும் கேட்டு கொண்டனர்.  

ஜெயா பச்சன் கூறுவதை கேட்ட அமிதாப் பச்சன் ஜெயாவை சிறிது நேரம் பார்த்த பின்னர் அவர் முன்னேறத் தொடங்கினார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   உலகில் அதிகரிக்கும் வெப்பநிலை..... கடலுக்கடியில் செல்லும் அபாயம்.....