உலகில் அதிகரிக்கும் வெப்பநிலை..... கடலுக்கடியில் செல்லும் அபாயம்.....

உலகில் அதிகரிக்கும் வெப்பநிலை..... கடலுக்கடியில் செல்லும் அபாயம்.....

உலகம் பல முனைகளிலும் தொடர் பிரச்சினைகளை சந்தித்து வருவதாக ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரஸ் தெரிவித்துள்ளார். 

சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் நடந்து வருகிறது. அதில், பங்கேற்று பேசிய அவர், பருவநிலை மாற்றம் அதாவது ஒவ்வொரு வாரமும் திகிலூட்டக்கூடிய பருவநிலை மாற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றதாகவும் கூறியுள்ளார். 

மேலும், பசுமைக்குடில் வாயு வெளியேற்றம் சாதனை அளவை தாண்டிக்கொண்டிருக்கிறது.  அதனால், வெப்பநிலை 2 புள்ளி 8  டிகிரி செல்சியஸ் அதிகரித்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.  

வெப்பநிலை அதிகரிகரிப்பால் பனிப்பாறைகள் விரைவாக உருகி வருவதாகவும் இந்த நிலை இப்படியே தொடர்ந்தால் விரைவாக நிலப்பரப்புகள் அனைத்தும் கடலுக்கடியில் சென்று விடும் எனவும் எச்சரிக்கும் விதமாகவும் பேசியுள்ளார் குட்டரஸ்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  வெண்கல வயதை சேர்ந்த மரணக் கிணறு....முழு விவரம் சுருக்கமாக!!!