
திருவள்ளூர் | திருத்தணி அரக்கோணம் சாலையில் சரவணபவன் ஓட்டல் முரளி என்பவருக்கு சொந்தமான தனியார் செயல்பட்டு வருகிறது. இந்த ஓட்டல் சமையல் அறையில் வழக்கம்போல் ஊழியர்கள் சமையல் செய்பவர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது 5 அடி நீளமுள்ள ஒரு நல்ல பாம்பு சமையல் அறையில் இருப்பதை கண்டதும் ஊழியர்கள் கூச்சலிட்டனர் அப்போது பாம்பு சமையல் அறையில் இருந்து இதனை கண்டதும் ஊழியர்கள் ஓட்டம் பிடித்தனர்.
மேலும் படிக்க | உயிரைக் கொடுத்து குஞ்சுகளை காப்பாற்றிய கோழி...
ஹோட்டலில் உணவு அருந்தி கொண்டிருந்தவர்களும் அலரடித்து ஓட்டம் பிடித்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர்.
நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்பு வீரர்கள் லாவகமாக பாம்பை பிடித்து பின்னர் தீயணைப்பு வீரர்கள் அருகில் உள்ள காப்பு காட்டில் கொண்டு சென்று விட்டனர்.
மேலும் படிக்க | எலியை விழுங்க முடியாமல் தவித்த பாம்பை மீட்ட இளைஞர்...