பிறந்தநாளுக்கு கெட்டுப் போன கேக்கை கொடுத்த கடைக்காரர்...

பேக்கரியில் கெட்டுபோன கேக் விற்பனை செய்ததாக, வாடிக்கையாளர் ஒருவர், உணவுப்பாதுகாப்பு துறைக்கு வாட்ஸ் ஆப் மூலம் புகார் அளித்துள்ளார்.

பிறந்தநாளுக்கு கெட்டுப் போன கேக்கை கொடுத்த கடைக்காரர்...

ஈரோடு | கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அண்ணாபாலம் எதிரில் பேக்கரி ஒன்று  இயங்கி வருகிறது. இந்த கடையில் குழந்தைகள்  விரும்பி உண்ணும் பிஸ்கட் கேக் மற்றும் வயதானவர்கள் உண்ணும் ரொட்டி போன்ற பேக்கரி பண்டங்களை பல ஆண்டுகளாக சொந்தமாக தயாரித்து நேரடியாக விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அவ்வையார்பாளையத்தை சேர்ந்த ஒருவர் தனது குழந்தையின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக கோபி அண்ணா பாலம் அருகே உள்ள பிரபல பேக்கரியில் ஒன்றரை கிலோ அளவுடைய கேக் ஒன்றை ரூ 750 க்கு வாங்கி வீட்டிற்கு எடுத்து சென்றுள்ளார்.

மேலும் படிக்க | அவமானப்படுத்துவது தான் புதிய நகைச்சுவையா? நகைச்சுவை அழிந்து விட்டதா?

அதிகாலையில் தனது குழந்தையின் பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடுவதற்காக அக்கம் பக்கத்தினரை அழைத்து கேக்கினை வெட்டி அங்கிருந்த குழந்தைகளுக்கு கொடுத்துள்ளார். இதனிடையே குழந்தையின் தந்தை குழந்தைகள் கேக் சாப்பிட்ட பின் மீதி இருந்த பாதி கேக்கினை வெட்டி பார்த்தபோது அந்த கேக் முற்றிலும் கெட்டுப்போய்  பூஞ்சை படிந்து பச்சை நிறமாக இருப்பது தெரியவந்துள்ளது

குழந்தையின் தந்தை கெட்டுப்போன கேக்கினை புகைப்படமாக எடுத்து உணவுப்பாதுகாப்பு துறைக்கு வாட்சாப் மூலம் புகார் அளித்துள்ளார். அதனைத்தொடர்ந்து கேக் வாங்கிய கோபி அண்ணாபாலம் எதிரில் உள்ள பேக்கரிக்கு கடைக்கு சென்று தான் இரவு வாங்கிய கேக் காலையில்  கெட்டுப்போயிருப்பதை தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா வீட்டில் திருட்டுப்போன நகைகள்....!!

அப்போது அங்கிருந்த ஊழியர்கள் அந்த கடையில் உள்ள கேக் தயாரிக்கும் அறைக்கு அழைத்து சென்று காண்பித்த பொது அங்கு  கையுறை தலையுறை போன்ற எந்த   சுகாதார விதிமுறைகளையும் பின்பற்றாமல் அங்கிருந்த பணியாளர்கள் கேக் தயாரிப்பில் ஈடுபட்டு வந்ததை கண்டு அதிர்ச்சியுற்றார். 

இது குறித்து குழந்தையின் தந்தை கூறுகையில் குழந்தைகளுக்கா உணவு பண்டங்களை தாயாரிக்கும் இது போன்ற பேக்கரிகளில் தின் பண்டங்களை வாங்கிச்செல்லும் பெற்றோர்கள் அதை குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு முன் தரமானதாக உள்ளதை உறுதி செய்த பின் குழந்தைகளுக்கு கொடுக்குமாறு தெரிவித்தார்.

மேலும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் இதுபோன்ற கடைகளில் அடிக்கடி சோதனை மேற்கொண்டு சுகாதாரமின்றி இருக்கும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்

மேலும் படிக்க | தகாத உறவு காரணமாக பேராசிரியரை தாக்கிய இருவர் கைது...