அவமானப்படுத்துவது தான் புதிய நகைச்சுவையா? நகைச்சுவை அழிந்து விட்டதா?

பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தும் வகையில் பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

அவமானப்படுத்துவது தான் புதிய நகைச்சுவையா? நகைச்சுவை அழிந்து விட்டதா?

தனியார் தொலைக்காட்சிகளில் வெளியான பல எண்டெர்டெயின்மெண்ட் ஷோக்களில் அதிகமாக மக்கள் மனதைக் கவர்ந்தது, அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சி தான். பல திறமைகளுக்கு ஒரு மேடை அமைத்து ஸ்டாண்ட் அப் காமெடி, மிமிக்ரி, நாடகம் போன்ற பல திறமையாளர்களை உலகிற்கு அறிமுகப்படுத்திய இந்த நிகழ்ச்சியைப் பார்த்து பல சேனல்கள் இது போன்ற நிகழ்ச்சிகளைத் துவங்கியது.

மேலும் படிக்க | “செங்களம்” ட்ரெய்லர் எனக்குள் பொறாமை ஏற்படுத்தியது - இயக்குனர் அமீர்...

அப்படி உருவான ‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியானது, பல வருடங்களாக, மிக அதிகமான சீசன்களோடு தற்போது வரை ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு, வயது வரம்பின்றி பல தரப்பினரும் ரசிகர்களாக இருக்கின்றனர். குழந்தைகள் உட்பட பார்க்கும் இந்த நிகழ்ச்சியில் சமீப காலமாக சில தகாத முறையில் சில காமெடிகள் பேசப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது.

அதுவும், ப்ரைம் நேரத்தில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியானது அதிகமாக குழந்தைகளையே பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் தொகுப்புகளில் கொஞ்சம் கண்ணியம் வேண்டாமா? காமெடி என்ற பெயரில் இரட்டை அர்த்த வசனமும், சில நேரங்களில் நேரடியாகவே ஆபாச வார்த்தையை பிரயோகிப்பதுதான் இவர்களுக்கு தரமான நகைச்சுவையாக இருந்து வருகிறது.

மேலும் படிக்க | “அயலி வேறு உலகம், இது வேறு உலகம்” - செங்களம் ட்ரெயிலர் வெளியீட்டு விழா...

தொடர் உருவ கேலி...

21ம் நூற்றாண்டில், எது குறித்த விழிப்புணர்வு வந்ததோ இல்லையோ, மக்கள் தங்களது உருவங்கள் குறித்து, உருவ கேலி குறித்து ஒரு விழிப்புணர்வு நன்றாக ஏற்பட்டுள்ளது என்பது தான் உண்மை. பல வகையான மோசமான நகைச்சுவைகளை நாம் அன்றாட வாழ்க்கையில் கேட்டுக் கொண்டு தான் இருக்கிறோம். உருவ கேலிகளை எதிர்த்து சோசியல் மீடியாக்கள் முதல் அனைத்து இடங்களிலும் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், இது போன்ற ஒரு சில நிகழ்ச்சிகள் இப்பொழுதும் மோசமான நகைச்சுவைகள் வந்த்க் கொண்டு தான் இருக்கின்றன.

குறிப்பாக, தன்னை உருவ கேலி செய்யக் கூடாது என பல வகையான பிரச்சாரம் செய்து வரும் பாலா, அடுத்தவர்களை மட்டும் உருவ கேலி மட்டும் தொடர்ந்து செய்து வருவது யாராலும் மருக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. இந்நிலையில், இந்த வாரம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பாலா, ஒரு சூழ்நிலையை எடுத்துரைக்கிறார்.

மேலும் படிக்க | ZEE5 வழங்கும் “செங்களம்” இணையத் தொடர் டிரெய்லர் வெளியீட்டு விழா !

மோசமான களம்...

அதாவது, மதுரை முத்து கல்லூரி புரொபசராகவும், ரேஷ்மா கல்லூரி மாணவியாகவும் இருக்கிறார். இப்போது இந்த மாணவியை புரொபசர் கரெக்ட் செய்கிறார். இதனை ஸ்ருதிகா கண்டிப்பதுபோலவும் தான் அந்த சூழ்நிலை.

காமெடியே இல்லாமல் போனாலும், தனக்கு ஏதோ தெரிந்த வகையில் நகைச்சுவை செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கும் ரேஷ்மா பஷுபுலேத்தி மற்றும் ஸ்ருத்திக்கா ஜட்ஜாக இருக்கும் நிலையில், அவர்களுடன் ரோபோ போலவே அமர்ந்திருக்கிறார் தாடி பாலாஜி. இன்னொரு பக்கம், எதையாவது சொல்லியே ஆக வேண்டும் என துடிக்கும் மதுரை முத்து.

இவர்கள் செய்யும் சாதாரண நகைச்சுவையே முகம் சுளிக்க வைக்கும் நிலையில், பாலா கொடுத்த இந்த் அமோசமான சூழல் அனைவரையும் வெறுப்படைய வைத்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

மேலும் படிக்க | ரஜினியின் நடிப்பு குறித்து இயக்குநர் அமீர் சர்ச்சை பேச்சு...

மார்க் வேண்டுமென்றால் செல்போன் நம்பர் வேண்டும் என மதுரை முத்து பேச, அண்ணன் என்று அழைப்பதற்கே இப்படி ரகசியமாய் அழைப்பது ஏன் என பாலாஜி நா - கூசும்படியான வார்த்தையை உதிர்க்க, இதை விடவெல்லாம் மேலாய், கண்ணாடி எடுத்துப் போட, ஜிப்பை மேல இழுக்க என பச்சைப் பச்சையாய் ஸ்ருதிகா பேசியதைப் பார்த்து பலரும் சேனலை மாற்ற முடிவெடுத்து விட்டனர். 

ஏற்கெனவே பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளை அங்கு பணியாற்றும் ஆசிரியர்களே மதிப்பெண்களை காரணம் காட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்துவது நீடித்து வருகிறது. ஆனால் இது எதையுமே கருத்தில் கொள்ளாமல் ஏதோ சிரிக்க வேண்டும் என எண்ணத்தில் ஆசிரியர்களையும் மாணவிகளையும் சேர்த்து வைத்து கொச்சையாக பேசுகிறது இந்த குழு. 

இதில் வேதனை என்னவென்றால் அவர்களின் காமெடிக்கு பார்வையாளர்கள் சிரிப்பதில்லை என தெரிந்து அவர்களே சிரித்துக் கொள்வதுதான்.. ஆபாசமில்லாத பேச்சுக்கள்தான் தரமான நகைச்சுவை என்பதை துளியும் அறிந்து கொள்ளாத இந்த நிகழ்ச்சியால் இளைஞர்கள், மாணவர்கள் ஆகியோரின் மனதில் வக்கிரங்கள் குடி கொள்ளும் என்பதுதான் நிச்சயம். இப்படியான ஆபாசமாக உரையாடும் இந்த பங்கேற்பாளர்கள் மீது ஏதேனும் சட்டம் பாயுமா? கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை பொழக்கப் போவது யாரு?

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | அதிகாரப்பூர்வமாக வெளியாக தயாராகி வரும் ‘அக நக’ பாடல்...