“அயலி வேறு உலகம், இது வேறு உலகம்” - செங்களம் ட்ரெயிலர் வெளியீட்டு விழா...

“அயலி வேறு உலகம், இது வேறு உலகம்” - செங்களம் ட்ரெயிலர் வெளியீட்டு விழா...

ZEE5 செயலியில் தற்போது “செங்களம்” என்ற இணையத்தொடர் த்மைழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகிறது. வருகிற மார்ச் 24ம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், அதன் ட்ரெயிலர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

Abi & Abi Entertainment PVT LTD சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரிப்பில், இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில், கலையரசன், வாணி போஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இந்த இணையத் தொடர், தென் தமிழக பின்னணியில் நடைபெறும் ஒரு பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது. இத்தொடரின்  டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். அதில், “எஸ் ஆர் பிரபாகரன் உடன் ஒரு மிகப்பெரிய பயணம், செங்களம். விருதுநகரில் நடக்கும் ஒரு கதை. தமிழில் நீங்கள் பார்க்காத பொலிடிகல் கதை. கண்டிப்பாக ரசிகர்களைத் திருப்திப்படுத்தும். அயலிக்கு நீங்கள் தந்த ஆதரவு மிகப்பெரியது அதே போல் செங்கலமும் உங்களுக்குப் பிடிக்கும்” என ZEE5 நிறுவன அதிகாரி சிஜு பிரபாகரன் கூறினார்.

மேலும் படிக்க | ZEE5 வழங்கும் “செங்களம்” இணையத் தொடர் டிரெய்லர் வெளியீட்டு விழா !

மேலும், அயலிக்கு தந்த ஆதரவு போலவே, இந்த தொடருக்கும் ஆதரவு தர வேண்டும் என ZEE5 நிறுவனம் சார்பில் கௌசிக் நரசிம்மன் கேட்டுக் கொண்டார். மேலும், “அது வேறு உலகம் இது வேறொரு உலகம். இதுவும் உங்களைக் கண்டிப்பாக ஆச்சரியப்படுத்தும். இத்தொடரை மிக உண்மையாக உழைத்து உருவாக்கியுள்ள குழுவினருக்கு என் வாழ்த்துக்கள். விரைவில் உங்கள் முன் இப்படைப்பைக் கொண்டு வரவுள்ளோம்” எனக் கூறினார்.

இதனையடுத்து, இசையமைப்பாளர் தரண், “தயாரிப்பாளர் அபினேஷ் இளங்கோவன் என் நண்பர், அவர் தான் என்னை இப்படைப்பிற்குள் கொண்டு வந்தார். மிகச்சிறந்த ஒரு படைப்பாக இது இருக்கும். இயக்குநர் என்னிடம் மிகச் சிறப்பான இசையை வாங்கியுள்ளார். நடிகர்கள் அனைவருமே அட்டகாசமாக நடித்துள்ளனர்” என்று கூறி படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | ரஜினியின் நடிப்பு குறித்து இயக்குநர் அமீர் சர்ச்சை பேச்சு...