ZEE5 வழங்கும் “செங்களம்” இணையத் தொடர் டிரெய்லர் வெளியீட்டு விழா !

ZEE5 வழங்கும் “செங்களம்” இணையத் தொடர் டிரெய்லர் வெளியீட்டு விழா !

ZEE5 வழங்கும் “செங்களம்” இணையத் தொடர் மார்ச் 24 அன்று வெளியாகவுள்ளது. தமிழ் ஓடிடி தளங்களில் பல தரமான வெற்றிப்படைப்புகளை தந்து வரும் ZEE5 ஓடிடி நிறுவனத்தின், அடுத்த படைப்பாக வெளிவருகிறது "செங்களம்" இணையத் தொடர்.

Abi & Abi Entertainment PVT LTD சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரிப்பில், இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில், கலையரசன், வாணி போஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இந்த இணையத் தொடர், தென் தமிழக பின்னணியில் நடைபெறும் ஒரு பொலிடிகல் திரில்லராக உருவாகியுள்ளது. இத்தொடரின்  டிரெய்லர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.

மேலும் படிக்க | அதிகாரப்பூர்வமாக வெளியாக தயாராகி வரும் ‘அக நக’ பாடல்...

இந்த இணையத் தொடரில், வாணி போஜன், கலையரசனுடன், ஷரத் லோஹிஸ்டாஷ்வா, விஜி பைரவி சந்திரசேகர், ஷாலி நிவேகாஸ், மானஷா ராதாகிருஷ்ணன், வேலா ராமமூர்த்தி, பக்ஸ், முத்துக்குமார், டேனியல் அன்னி போப், அர்ஜய், பவன், பிரேம், கஜராஜ், பூஜா வைத்தியநாதன் ஆகியோரும் நடித்துள்ளனர். இதன் இணை தயாரிப்பாளர் இர்ஃபான் மாலிக் என்பது குறிப்பிடத்தக்கது.

தரண் இசையமைக்க, பிஜு. V. டான் போஸ்கோ தொகுத்துள்ளார். மேலும், ஒளிப்பதிவு வெற்றிவேல் மகேந்திரன் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. வித்தியாசமான கதைகளத்தில் அனைவரது மனதையும் கவரும் பல இணையத்தொடர்களைக் கொண்டுக்கும் ZEE5 -இன் அடுத்த இணையத்தொடரான “செங்களம்” தொடரின் எதிர்பார்ப்பு இந்த ட்ர்ந்யிலர் அதிகரித்துள்ளது என்று தான் கூற வேண்டும்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | ரஜினியின் நடிப்பு குறித்து இயக்குநர் அமீர் சர்ச்சை பேச்சு...