கூட்டம் கூட்டமாக குவியும் சுற்றுலா பயணிகள்...

கொடைக்கானல் மற்றும் கன்னியாகுமரி பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். கொரோனா காலத்திற்கு பிறகு இவ்வளவு கூட்டம் இப்போது தான் கூடியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டம் கூட்டமாக குவியும் சுற்றுலா பயணிகள்...

திண்டுக்கல் | மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் வார விடுமுறை மற்றும் தொடர் விடுமுறை ஆகிய நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படும் . இந்த நிலையில் வார விடுமுறை தொடர்ந்து கொடைக்கானலுக்கு தமிழகம் கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பணிகள் அதிக அளவில் குவிந்துள்ளனர்.

மேலும் படிக்க | நேர்மையின் மறு உருவத்திற்கு மரியாதை.. கொடைக்காணலில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்...

கேரளாவில் தற்போது பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் கேரளா சுற்றுலா பணிகளின் வருகை தற்போது கொடைக்கானலில் அதிகரித்துள்ளது. பிரதான சுற்றுலா தளங்களான மோயர் சதுக்கம், பைன் மர காடுகள், குணா குகை, நட்சத்திர ஏரி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கூட்டம் கூட்டமாக சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.

மேலும் வெயில் ஒரு பகுதியிலும் மற்றொரு பகுதியில் கடும் பனிமூட்டமும் என மாறி மாறி காலநிலை இருந்து வருவதால் சுற்றுலா பயணிகள் அனுபவித்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது . சுற்றுலா பயணிகளின் வருகையால் உள்ளூர் வியாபாரிகள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் படிக்க | மாற்றுத் திறனாளிகளுக்கு மெரினாவில் நிரந்தர நடைபாதை - சென்னை மாநகராட்சியின் புதிய முயற்சி

கன்னியாகுமரி | குற்றாலம் என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கியமான ஒன்று.இங்கு தினசரி உள்நாடு உட்பட வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.ஒரு வார காலமாக பெய்து வந்த மழையின் அளவு குறைந்து தற்போது வெயில் வாட்டி வருவதால் பொதுமக்களும் விடுமுறை நாட்களில் சுற்றுலா தலங்களை நாடி வருகின்றனர்.

மேலும் படிக்க | அருவியில் விழுந்த உடும்பால் பதறியடித்து ஓடிய மக்கள்...

அந்த வகையில் வாரத்தின் கடைசி விடுமுறை நாளான இன்று திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் காலை முதலே குவிய தொடங்கியுள்ளனர்.உள்ளூர் உட்பட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

அருவியில் கொட்டும் மிதமான நீரில் நீண்ட நேரம் நீராடியும், அருகிலுள்ள நீச்சல் குளத்தில் நீச்சல் அடித்தும்,சிறுவர் பூங்காவில் குழந்தைகளுடன் விளையாடியும் மகிழ்ந்து வருகின்றனர்.அதுபோல அருவியின் மேற்பகுதியில் அமைந்துள்ள சுற்றுலா படகுத்துறையிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து படகு சவாரி செய்து கோதையாற்றின் இயற்கை அழகையும் ரசித்து வருகின்றனர்.

மேலும் படிக்க | தொடங்கியது அரசு பள்ளிகளில் கலைத்திருவிழா...! வெற்றி பெறுபவர்களுக்கு சூப்பர் பரிசு...!