அருவியில் விழுந்த உடும்பால் பதறியடித்து ஓடிய மக்கள்...

குற்றாலம் மெயின் அருவியில் 6 அடி நீளமுள்ள உடும்பு விழுந்ததால் குளித்துக் கொண்டிருந்த மக்கள் அலறி அடித்து ஒட்டம் பிடித்துள்ளனர்.
அருவியில் விழுந்த உடும்பால் பதறியடித்து ஓடிய மக்கள்...
Published on
Updated on
1 min read

தென்காசி | சுற்றுலா ஸ்தலமான குற்றாலம்  மெயின் அருகில் இன்று பிற்பகல் ஐயப்ப பக்தர்கள் அருவியில் நீராடி கொண்டிருந்த போது   சுமார் 6 அடி நீளமுள்ள  உடும்பு ஒன்று அருவியின்  மேல் பகுதியிலிருந்து கீழே விழுந்தது 

அருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில்  அந்த உடும்பு விழுந்தது. இதைக் கண்டு அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்கள் முதலை விழுந்தது எனக் கூறி அலறி அடித்து ஓடினர். பெண்கள் பகுதியல் இருந்து  நகர்ந்து சென்ற உடும்பு அருவிக்கரையின் தடாகத்தில் விழுந்தது .

இது குறித்து வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு  தகவல் கொடுக்கப்பட்டதுஅங்கு விரைந்து வந்த தென்காசி தீயணைப்புத்துறையினர் மற்றும் வனத்துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தடாகத்தில் இருந்து உடும்பை பிடித்து  மேற்குத் தொடர்ச்சி வனப் பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர் .

மெயின் அருவியில் ஐய்யப்ப பக்தர்களும், ஏராளமான பெண்களும் குளித்துக் கொண்டிருந்த போது அருவியில் உடும்பு விழுந்ததால்  அருவிக்கரை சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com