பணியின் போது நெஞ்சுவலியால் பேருந்து நடத்துனர் உயிரிழப்பு...

பணியின் போது அரசு பேருந்து நடத்துனருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பணியின் போது நெஞ்சுவலியால் பேருந்து நடத்துனர் உயிரிழப்பு...

திருநெல்வேலி | குமரி மாவட்டம் நாகர்கோவிலிருந்து திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்திற்கு இன்று பிற்பகல் அரசு பஸ் ஒன்று புறப்பட்டது. அந்த பஸ்சில் நாகர்கோவில் அருமனையைச் சேர்ந்த சுரேஷ்குமார் (47) என்பவர் நடத்துனராகவும் பேச்சிப்பறையைச் சேர்ந்த செல்வராஜ் (47) என்வர் டிரைவராகவும் பணியில் இருந்து உள்ளனர்.

அந்த பஸ் வள்ளியூரை கடந்து வாகைகுளம் அருகே வரும் பொழுது நடத்துனருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.  உடனே மயங்கிய அவர் சரிந்து விழுந்தார்.  இதனை கண்டு அதிர்ந்த பயணிகள் டிரைவருடன் சேர்து உடனடியாக அதே பஸ்சில் நாங்குநேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.

மேலும் படிக்க | பிறந்தநாளுக்கு கெட்டுப் போன கேக்கை கொடுத்த கடைக்காரர்...

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தகவல் தெரிவித்தனர்.  உரிய பணியாளர்கள் இல்லாததால் அதிக பணிச்சுமையுடன் தொடர்ந்து அவர் பணியாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என சக பணியாளர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | அவமானப்படுத்துவது தான் புதிய நகைச்சுவையா? நகைச்சுவை அழிந்து விட்டதா?