40 அடி கிணற்றில் விழுந்த 2 கரடிகள்... 8 மணி நேரமாக போராடிய அதிகாரிகள்...

கிணற்றில் தவறி விழுந்த இரண்டு கரடிகளை 8 மணி நேர போராட்டத்திற்கு பின் வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.

40 அடி கிணற்றில் விழுந்த 2 கரடிகள்... 8 மணி நேரமாக போராடிய அதிகாரிகள்...

திருப்பத்தூர் | ஆம்பூர் அடுத்த அருங்கல்துருகம் அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள சக்கரவர்த்தி என்பவருக்கு சொந்தமான  விவசாய நிலத்தில் ஒரு கிணறு அமைந்துள்ளது. பாழடைந்து, 40 அடி ஆழமான இந்த கிணறில் நேற்று மாலை இரண்டு கரடிகள் தவறி விழுந்து காயம் அடைந்தன.

கரடிகளின் அலறல் சத்தம் கேட்ட  அப்பகுதி மக்கள் உடனடியாக ஆம்பூர் வனத் துறையினருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளித்தனர்.

மேலும் படிக்க | பெற்ற தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன்...

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறை சேர்ந்த சுமார் 25க்கும் மேற்பட்டோர், 2 ஜேசிபி இயந்திரங்களின் உதவியுடன் கிணற்றின் பக்கவாட்டு சுவர்களை அகலப்படுத்தி பணை மரத்தினை கிணற்றில் விட்டு அதன் மீது கிணற்றில் உள்ள கரடிகள் பாதுகாப்புடன் ஏறி வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.

சுமார் 5 மணி நேர முயற்சிக்குப் பின் ஒரு கரடியை பத்திரமாக மீட்டனர். ஆனால், மீட்கப்பட்ட கரடியானது மேலே வரும் போது அங்கிருந்த வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் பொதுமக்கள் பார்த்து அச்சத்துடன் குரல் எழுப்பியதால் மீண்டும் அருகாமையில் உள்ள வனப்பகுதியை நோக்கி ஓடிச் சென்றது.

மேலும் படிக்க | பேருந்து கவிழ்ந்து விபத்தில் 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம்...

மற்றொரு கரடியை மீட்பதில் தாமதம் ஏற்பட்டதால் உதவி வன பாதுகாவலர் ராஜ்குமார் வன அலுவலர்கள் சங்கரய்யா இளங்கோ ஆகியோர் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சுமார் 8 மணி நேரத்திற்கு மேலாக போராடி பொதுமக்கள் உதவியுடன்  கிணற்றில் காயமடைந்த மேலும் ஒரு கரடியை பத்திரமாக மீட்டனர்.

மேலும் அப்பகுதியில் யானை சிறுத்தை கரடி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் அப்பகுதி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தினர்.

மேலும் படிக்க | கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை...10 மணி நேரத்தில் மீட்ட போலீசாருக்கு பாராட்டு!

ஆம்பூர் அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலத்தில் இருந்த பாழடைந்த 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த இரண்டு கரடிகளை 8 மணி நேரத்துக்கு பின் வனத்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் பொதுமக்கள் உதவியுடன் போராடி உயிருடன் மீட்டனர்.

அப்போது  வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் குரல் எழுப்பியதால் இரண்டு கரடிகளும் அருகில் இருந்த வனப்பகுதியை நோக்கி ஓடி விட்டதால் வனத்துறையினர் பெருமூச்சு விட்டனர் இதனால் அப்பகுதி மக்கள்  பெரும் அச்சத்தில் இருந்தனர்.

மேலும் படிக்க | வழக்கறிஞரை வெட்டி படுகொலை செய்த மர்ம நபர்கள்...