பெற்ற தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன்...

மேல்மலையனூர் அருகே குடிபோதையில் தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.

பெற்ற தந்தையை கத்தியால் குத்தி கொலை செய்த மகன்...

விழுப்புரம் | ஈயக்குனம் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவருடைய மூத்த மகன் சுப்ரமணி குடிபோதைக்கு அடிமையான நிலையில் தினந்தோறும் குடித்து விட்டு தந்தையுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு முதல் குடிபோதையில் இருந்த வந்த சுப்ரமணி காலையில் மீண்டும் தந்தையுடன் தகராறில் ஈடுபட்டு வந்த நிலையில் ஆத்திரமடைந்த மகன் சுப்ரமணி வீட்டிலிருந்த கத்தியை கொண்டு தந்தையை தலை, மார்பு, வயிறு உள்ளிட்ட இடங்களில் பலமாக குடிவெறியில் குத்தியதால் தந்தை நிலை குலைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவலறிந்து வந்த வளத்தி காவல் நிலைய போலீசாரிடம் பொதுமக்கள் சுப்ரமணியை பிடித்துக் கொடுத்தனர். மேலும், இறந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

குடிபோதையில் தந்தையை மகன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | தாயுடன் சேர்ந்து தந்தையை அடித்து கொன்ற மகன்...