கள்ளக்காதலனை கல்லால் அடித்துக் கொலை செய்த கணவன்... மனைவியுடன் கைதான அவலம்...

தனது மனைவியுடன் கள்ளக்காதலன் இருப்பதைக் கண்ட கணவன், அந்த கள்ளக்காதலனை கல்லால் அடித்தே கொலை செய்துள்ளார். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்காதலனை கல்லால் அடித்துக் கொலை செய்த கணவன்... மனைவியுடன் கைதான அவலம்...

விருதுநகர் | சிவகாசி அருகே உள்ள விசுவநத்தம் காகா காலனியில் வசித்து வரும் 25 வயதான பாண்டி செல்வம் 23 வயதான ரூபாவை 3 வருடத்திற்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்த இருவருக்கும் 1 1/2 வயதில் திவ்யபாரதி என்ற மகள் உள்ளார்.

பாண்டி செல்வம் பூ வியாபாரமும், ரூபா எட்டக்காபட்டியில் பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்தும் வருவது குறிப்பிடத்தக்கது. ரூபா வேலை செய்து வரும் தொழிற்சாலையில், வாகன ஓட்டுநராக வேலை செய்து வருபவர் 26 வயதான கருப்பசாமி. சாத்தூர் அருகே படந்தால் கிராமத்தைச் சேர்ந்த இவருடன், ரூபா பழகிய நிலையில், அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியிருக்கிறது.

மேலும் படிக்க | ஆணவக்கொலை செய்யப்பட்ட கோகுல்ராஜ் சிசிடிவி காட்சிகள் - உயர்நீதிமன்றம்

பல நாட்களாக இவர்களுக்கு இடையில் பழக்கம் உருவாகிய நிலையில், திடீரென, பாண்டிசெல்வத்திற்கு சொந்த அலுவல் காரணமாக விருதுநகர் அருகேயுள்ள ஆமத்தூருக்கு சென்று வர வேண்டி இருந்திருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முயன்ற ரூபா, தனது கள்ளக்காதலனான கருப்பசாமியை வீட்டிற்கு வரும் படியாக அழைத்திருக்கிறார்.

கணவன் வர தாமதமாகும் என்ற மிதப்பில், இரவு முழுவதும் சந்தோஷமாக இருந்த காதல் ஜோடிக்கு காலை விடிந்ததும் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. தனது காரியம் சீக்கிரம் முடிந்ததால் அவசர அவசரமாக வீடு திரும்பிய பாண்டி செல்வம், தனது கண்ணால் கண்ட காட்சியை நம்ப முடியாமல் அதிர்ந்து போனார்.

நம்பி தனது மனைவியை தனியாக விட்டுப் போனால், அவள் வேறொரு ஆணுடன் இருப்பதைப் பார்த்து கோவத்தில் கொந்தளித்த பாண்டி, அவர்களை கையும் களவுமாக பிடிக்க வேண்டுமென வீட்டை வெளிப்புரத்தில் இருந்து பூட்டி விட்டார். திடீரென வீடு வெளிப்புரமாக பூட்டப்பட்டிருந்தது உணர்ந்து, கதவை உடைக்கும் முயற்சியில் அந்த காதல் ஜோடி இறங்கியது.

மேலும் படிக்க | ஒரே அடியில் மயக்கமடைந்த ரமேஷ்...விடாத மர்மநபர்...பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்!

பல வழியில் முயற்சி செய்து, ஒருவழியாக கதவை உடைத்து வெளியே தப்பித்து ஓட முயன்ற போது, கருப்பசாமியின் தலையில் கட்டையால் அடித்து பாண்டி செல்வம் தாக்கியுள்ளார். பின், தொடர்ந்து கல்லால் அவரை அடித்தே கொலை செய்துள்ளார். 

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கருப்பசாமியின் பிரேதத்தை கைப்பற்றி, உடற்கூறு ஆய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, ரூபா- பாண்டிசெல்வம் தம்பதியினரை கைது செய்து, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவியின் கள்ளக்காதல் தொடர்பாக கள்ளக் காதலனை, கணவனே கொலை  செய்த சம்பவம் சிவகாசி வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | மாற்றுத்திறனாளி மாணவர்கள் உதவியாளர் தேவைப்படுவோர் ஜன -13 வரை விண்ணப்பம் - தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு