தலை தீபாவளி அன்று பெண்ணின் தலையில் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய குடும்பம்...

பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்ட பெண்ணுக்கு, தலை தீபாவளியன்று, பெட்ரோலை ஊற்றி  எரிக்க முயன்ற கொடூர சம்பவம் மதுரை அருகே அரங்கேறியுள்ளது. இது ஆணவக் கொலையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தலை தீபாவளி அன்று பெண்ணின் தலையில் பெட்ரோல் ஊற்றி கொளுத்திய குடும்பம்...

மதுரை: பழங்காநத்தம் அருகே உள்ள மருதுபாண்டி தெருவில் வசித்து வந்தனர் பாலாஜி மற்றும் பவித்ரா. எதிர் எதிர் வீட்டில் வசித்து வரும் இவர்கள் இருவரும், சிறு வயது முதலே காதலித்து வந்துள்ளனர். 19 வயதான பவித்ரா கல்லூரியில் 2-ம் ஆண்டு பயின்று வருகிறார். 

எதிர்வீட்டுக் காதல்...

21 வயதான பாலாஜி தனியார் நிறுவனம் ஒன்றில் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றி வருகிறார். இவர்களின் காதல் விவகாரம் பெண் வீட்டிற்கு தெரியவர பொருளாதாரத்தில் தன்னை விட பின்தங்கியுள்ள பாலாஜிக்கு திருமணம் செய்து கொடுப்பதில் பெண் வீட்டாருக்கு விருப்பம் இல்லை. இருவரும் ஒரே ஜாதி என்றாலும், பொருளாதார பிரச்சனை காரணமாக பெண் வீட்டில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. 

மேலும் படிக்க | தட்டிக்கேட்டதால் தாக்கிய கொடூரம்... ஆபத்தான நிலையில் பாதிக்கப்பட்டவர் மருத்துவமனையில் அனுமதி...

ஜாதி பிரச்சனை இல்லை...

பெண் வீட்டாரின் கடும் எதிர்ப்பையும் மீறி, கடந்த 10 நாட்களுக்கு முன்பு திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஒரு கோயிலில், நண்பர்கள் உதவியுடன், பவித்ராவிற்கு தாலி கட்டி, தனது மனைவியாக்கிக் கொண்டார்  பாலாஜி. இந்நிலையில், பாலாஜி மற்றும் பவித்ரா இருவரும் தலை தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர்.  

பட்டாசோடு சேர்த்து கொளுத்திய கொடூரம்...

வீட்டின் வெளியே பவித்ரா, பட்டாசை பற்ற வைத்த போது, அங்கு வந்த பவித்ராவின் சித்தப்பா கார்த்தி, யாரும் எதிர்பாராத நேரத்தில், தன் கையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை, பவித்ராவின் முகத்தில் சட்டென வீசியுள்ளார். 

மேலும் படிக்க |  தொடர் கண்காணிப்பில் சிக்கிய வெளிநாட்டுப் பெண் போதை பெட்லர்...

தர்ம அடி வாங்கிய சித்தப்பா...

பட்டாசில் இருந்து வெளியான தீப்பொறியால் பவித்ராவின் முகம் மற்றும் தோள்பட்டையில் தீப்பற்றியுள்ளது. உடனடியாக அருகில் இருந்தவர்கள், தீயை அணைத்து மருத்துவமனையில் அனுமதித்தனர். பெண்ணின் மீது பெட்ரோலை ஊற்றிய சித்தப்பா கார்த்தியை பொதுமக்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர்.  இதில் காயமடைந்த கார்த்தி மதுரை ராஜாஜி அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க மனதை பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு...